Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வரிவிதிப்பு முறையில் புதிய நடைமுறை செப். 13ம் தேதி முதல் அமல்

Print PDF

னகரன் 09.09.2010

மாநகராட்சி வரிவிதிப்பு முறையில் புதிய நடைமுறை செப். 13ம் தேதி முதல் அமல்

நெல்லை, செப். 9: நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சொத்து வரி விதிப்பு செய்து பொதுமக்கள் உடனடியாக ஆணை பெறும் வகையில் எளிமையான முறையில் நெல்லை மாநகராட்சி இணையதளத்தில் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படிவத்தினை மாநகராட்சி சேவை மையத்திலும் பெற்றுக் கொள்ள லாம்.

கட்டிடத்தின் உரிமையா ளர் இப்படிவத்தினை பூர்த்தி செய்து, அத்துடன் புதிதாக கட்டியுள்ள கட்டுமானத்திற்கு, கட்டிட அனுமதி பெற்ற வரைபட ஆவணம், மற்றும் பத்திரநகல் ஆகியவற்றை இரட்டை பிரதிகளில் இணைத்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் சமர்ப்பித்து ஒப்புகை பெறலாம். மனுதாரர் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் மற்றும் ஆவணங்க ளின் அடிப்படையில் உட னடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அன்றைய தினமே வரி செலுத்த சிறப்பு அறிவிப்பு கட்டிட உரிமையாளருக்கு வழங்கப்படும்.

மனுதாரர் சமர்ப்பித்த விபரங்கள் குறித்து சரியான தன்மையை ஆராய மண்டல வருவாய் உதவியாளர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் மனுதாரரின் கட்டுமான இடத்தை தல ஆய்வு செய்வர். மனுதாரர் ஆவணங்களில் குறைபாடு கள் இருப்பின், சொத்துவரிக் கான சிறப்பு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு புதிய வரி விதிப்பு செய்யப்படும்.

நெல்லை மாநகர மக்கள் புதிதாக கட்டும் கட்டிடங்களுக்கு தேவையான மின் இணைப்பு பெறவும், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெறவும் தேவையான சொத்து வரிவிதிப்பு உடனடி யாக பெற்றிட, இவ்வாய்ப் பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டம் வரும் 13ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.