Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்து & குடிநீர் வரியை உடனே செலுத்தவேண்டும் செய்யாறு நகர வளர்ச்சிக்குஆணையாளர் வேண்டுகோள்

Print PDF

தினகரன் 21.09.2010

சொத்து & குடிநீர் வரியை உடனே செலுத்தவேண்டும் செய்யாறு நகர வளர்ச்சிக்குஆணையாளர் வேண்டுகோள்

செய்யாறு, செப்.21: செய்யாறு நகர வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற சொத்து, குடிநீர் வரியை உடனே செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் எம்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்யாறு நகராட்சி ஆணையாளர் எம்.ராஜா நிருபர்களிடம் கூறியது:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் இயற்கை இடர்பாடுகள் நிவாரண திட்டத்தின்கீழ் செய்யாறு நகராட்சிக்கு ரூ

8 லட்சம் வழங்கினார். அதன்மூலம் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தற்போது நகரில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருவோத்தூரில் கட்டப்பட்டுள்ள 24 மணி நேர மருந்தகத்திற்கு, மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனம் செய்ய, அரசிடம் கோரியுள்ளோம். பணியாளர் நியமனத்துக்கு பின் மருந்தகம் துவங்கப்படும்.

நகராட்சி வளாகத்தில் ரூ48லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடத்தில், ரூ25 லட்சம் செலவில் ஐ டெக் வசதிகள் செய்ய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நகரின் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நிலுவையில் உள்ள குடிநீர், சொத்து, தொழில் வரிகளை உடனடியாக பொதுமக்கள் செலுத்தவேண்டும்.

தெருவிளக்கு, துப்புரவு பணி, சாலை வசதி, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து நகராட்சிக்கு 222307 என்ற தொலைபேசியிலும், 93449 45304 என்ற செல் போனிலும் புகார் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.