Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டுவரி அதிகம் என்றால் மேல்முறையீடு செய்யலாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

Print PDF

தினகரன் 27.09.2010

வீட்டுவரி அதிகம் என்றால் மேல்முறையீடு செய்யலாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

ஈரோடு, செப். 27: ஈரோடு மாநகராட்சி வீடுகளுக்கு விதிக்கப்படும் வரி அதிகமென கருதும் நுகர்வோர்கள் மேல் முறையீட்டு மனுவை வரிவிதிப்பு அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து தகுந்த பரிகாரம் பெறலாம். தீர்ப்பாயத்திற்கு பிரத்யேகமாக நீதித்துறையில் இருந்து நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தீர்ப்பாயத்திற்கான அனைத்து சட்ட திட்டங்களும் அரசால் நிர்ணயிக்கப்படும். வரிவிதிப்பின் பேரில் பெறப்பட்டுள்ள அனைத்து மேல் முறையீட்டு மனுக்களும் 5 மாதங்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும். தீர்ப்பாயத்தில் வரிமேல் முறையீடு செய்யவும் சொத்தின் உரிமையாளர்கள் நேரிலோ அல்லது அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் மூலமாகவும் நேரில் ஆஜராகலாம்.

தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் திருப்தியடையாத நிலையில் அதிருப்திக்குள்ள வரித் தொகை முழுவதையும் மாநகராட்சியில் செலுத்தி விட்டு மாவட்ட நீதிபதிக்கு மேல்முறையீடு செய்யலாம், என மாநகராட்சி ஆணை யாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.