Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கட்டண பாக்கி மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள ரூ3,065 கோடி வருவாய்

Print PDF

தினகரன் 07.10.2010

குடிநீர் கட்டண பாக்கி மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள ரூ3,065 கோடி வருவாய்

மும்பை, அக். 7: மும்பை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோக செலவு மற்றும் கட்டண பாக்கியாக ரூ3065 கோடி தொகை நிலுவையில் உள்ளது.

மும்பைக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் மாநகராட்சியின் குடிநீர் விநியோக பிரிவு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. வருவாயை விட செலவு அதிகரித்து கொண்டே போவதால் இந்த துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்து கொண்டே போகிறது.

இந்த துறைக்கு மொத்தம் ரூ3.065 கோடி வருவாய் வராமல் நிலுவையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குடிநீர் விநியோக துறை தொடங்கப்பட்டது முதல் வர வேண்டிய வருவாய் நிலுவையில் உள்ள தொகை கணிசமாக சேர்ந்து இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மாநகராட்சிக்கு ரூ200 கோடி வருவாய் வர வேண்டியுள்ளது என்று டேட்டா தெரிவிக்கிறது.

குடிநீர் விநியோகம் தொடர்பான கட்டண பிரச்னைகளால் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், வரி வசூலாகாமல் இருப்பது போன்றவைகளால் இந்த வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்கு மாநகராட்சி குறைந்த கட்டணம் வசூலிக்கிறது. அதே சமயம் மானியமும் வழங்குகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் கட்டணம் அதிகமாகும். ஆனால் சலுகைகள் கொடுத்தாலும் குடிநீர் கட்டணத்தில் குடிசைப்பகுதிகளீல் 58 சதவீதமும் குடியிருப்பு கட்டிடங்களிடம் இருந்து 85 சதவீதமும் வருவாய் கிடைக்கிறது.

வருவாய் முழுமையாக கிடைப்பதில்லை. முதலீடு மற்றும் லாப சுழற்சியில் கடும் வித்தியாசம் நிலவுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் வருவாய்க்கு ஏற்ற செலவு இல்லை. செலவு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். இது பற்றி மாநகராட்சியின் குடிநீர் வினியோக துறை முதன்மை பொறியாளர் வினய் தேஷ்பாண்டே மறுத்து விட்டார்.