Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அக்., 15க்குள் குடிநீர் கட்டணம் செலுத்தணும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 08.10.2010

அக்., 15க்குள் குடிநீர் கட்டணம் செலுத்தணும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

திருச்சி: "திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் கேட்புத் தொகையை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என கமிஷனர் பால்சாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு கட்டடங்கள், வணிக உபயோகக் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு பின்வரும் கட்டண விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது.வீட்டுப் பயனுக்கு (வகிதாச்சார அடிப்படையில்) முதல் குழாய் மாதம் 100 ரூபாய், இரண்டாம் குழாய் மாதம் 125 ரூபாய், மூன்றாம் குழாய் மாதம் 150 ரூபாய்; குடிநீர் அல்லாத பயனுக்கு குறைந்தபட் கட்டணம் 1,000 லிட்டருக்கு 50 ரூபாய், ஒரு மாதம் 500 ரூபாய் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆயிரம் லிட்டர் 100 ரூபாய் ஒரு மாதத்துக்கு 800 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேற்படி கட்டண விகிதங்களின் அடிப்படையில் வீட்டு உபயோகப் பயனுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை கேட்பு எழுப்பப்பட்டும், குடிநீர் அல்லாத பயனுக்கான இணைப்புக்கு (வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கான இணைப்புகள்) மாதம்தோறும் கேட்பு எழுப்பப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.குடிநீர் கட்டண நிலுவை மற்றும் நடப்பு கேட்பு விவரங்களை ஏற்கனவே மாநகராட்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தியோ அல்லது கம்ப்யூட்டர் வரிவசூல் மையங்களை நேரடியாக அணுகி தங்களது வரிவிதிப்பு எண்ணை தெரிவித்து, நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகையை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, திருச்சி மாநகராட்சிப் பகுதியிலுள்ள குடியிருப்பு, வணிக வளாகம், தொழிற்சாலை கட்டடம் உரிமையாளர்கள் தாங்கள் மாகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணங்களை மாநகராட்சி மையம் அலுவலகம், நான்கு கோட்ட அலுவலகங்கள், சேவை மையங்கள், நடமாடும் வரிவசூல் மையம் ஆகிய இடங்களில் நிலுவையின்றி 15ம் தேதிக்குள் செலுத்தி உரிய ரசீதைப் பெற்றுக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர் மூலம் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.