Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வந்தவாசியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 11.10.2010

வந்தவாசியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையாளர் எச்சரிக்கை

வந்தவாசி, அக். 11: வந்தவாசி நகராட்சி ஆணையாளர் என். உசேன்பாரூக்மன்னர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகராட்சியில் ரூ4.50 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய பஸ்நிலையத்திலிருந்து திண்டிவனம் சாலையை இணைக்கும் புதிய சாலை ரூ2 கோடியில் அமைப்பட உள்ளது. ரூ75 லட்சத்தில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

அதேபோல் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள உள்ளதால், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர், தொழில் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை பாக்கிகளை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக அளவில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். இதனை தவிர்க்க பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை உடனடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.