Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி கமிஷனர் காலிப்பணியிடத்தால் பாதிப்பு : சாத்தூரில் வரி வசூல், வளர்ச்சிப் பணிகள் மந்தம்

Print PDF

தினமலர் 19.10.2010

நகராட்சி கமிஷனர் காலிப்பணியிடத்தால் பாதிப்பு : சாத்தூரில் வரி வசூல், வளர்ச்சிப் பணிகள் மந்தம்

சாத்தூர் : சாத்தூர் நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் நகராட்சி கமிஷனர் காளிமுத்துபணி நிறைவு பெற்று சென்று விட்ட நிலையில் இப்பணியிடத்திற்கு விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஜான்சனிடம் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதத்திற்கும் மேலாக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் விருதுநகர் கமிஷனர், சாத்தூர் வந்து செல்லும் நாட்கள் குறைவாக இருப்பதால் இவரது கையெழுத்துக்காக பல பைல்கள் சாத்தூரில் காத்துக் கிடக்கின்றன. ஏற்கனவே சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் விருதுநகர் சென்று ஓவ்வொறு முறையும் கையெழுத்து வாங்க பிறப்பு சான்று வாங்க வருபவர்களும், புதிய தொழில்கள் தொடங்க விண்ணப்பித்தவர்களும், புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி கோரி வருவோரும் பல நாட்கள் காத்து கிடக்கின்றனர். விவரமான சிலரோ நகராட்சி ஊழியர்களை "கவனித்து' தங்கள் வேலையை முடித்து விடுகின்றனர்.

விபரம் இல்லாத பலர் தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு காவடி எடுக்கின்றனர். வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. சாத்தூரில் பல கட்டடங்கள் முறையான அனுமதியின்றியே கட்டப்படுகின்றன. கட்டடங்கள் அதிகரித்து வந்த போதிலும் நகராட்சியின் நிதி நிலை, வருவாய் குறைவாகவே உள்ளது. முறையான அனுமதியில்லாத பாதாள சாக்கடை இணைப்புகள் பெருகி வருவதால் பல இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகையில் குடிநீரில் சாக்கடை கலக்கிறது. மேலும் நகரில் வரிவசூல் செய்யும் வேலையும் சரிவர நடைபெறவில்லை, இதனால் நகராட்சிக்கு வர வேண்டிய வருமானம் 65 சதவீத நிலையிலேயே உள்ளது.

நகராட்சியின் பொது நிதி நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் இதனால் சாதாரணமான பைப் லைன் உடைப்பை கூட ரிப்பேர் செய்யவும், பியூஸ் போன தெரு விளக்குகளுக்கு புது டியூப் லைட் வாங்கவும் நகராட்சியில் நிதி யில்லாமல் மிகவும் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக நகராட்சியினர் தெரிவித்தனர். சாத்தூர் நகராட்சியில் தினம்தோறும் தண்ணீர் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் குடிநீர் கட்டணத்தை கூட நகராட்சி பில் கலெக்டர்களால் 100 சதவீதம் வசூலிக்க முடியவில்லை. இதற்கு காரணம் கமிஷனரின் நேரடி பார்வை இல்லாததது தான். எனவே சாத்தூருக்கு தனி கமிஷனர் நியமிக்க வேண்டும்.