Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் இயங்கி வரும் அனைத்து கடைகளும் வரி பட்டியலில் சேர்ப்பு மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 20.10.2010

பெங்களூரில் இயங்கி வரும் அனைத்து கடைகளும் வரி பட்டியலில் சேர்ப்பு மாநகராட்சி முடிவு

பெங்களூர், அக். 20: பெங்களூர் மாநகராட்சியில் இய ங்கி வரும் சிறிய கடைமுதல் பெரிய வர்த்தக நிலையங்கள் வரை அனைத்தும் மாநகராட்சியின் வரி திட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் வரி சான்றிதழ் வழங்கும் முகாமை ஒரு மாதம் நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூர் மாநகரில் எல்லை தற்போது 810 சதுர கிலோ மீட்டர் பரந்துள்ளது. மொத்தம் உள்ள 198 வார்டுகளில் குறைந்த பட்சம் 10 லட்சத்திற்கும் அதிக மான கடை, ஒட்டல், வர்த் தக மையம், சிறு தொழிற்சாலை, தொழிற்சாலை உள்பட மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் இயங்கி வருகிறது. ஆனால் மாநகராட்சியின் அனுமதி பெற்று வரி செலுத்தும் நிலையங்க ளில் எண்ணிக்கை 40 ஆயி ரம் மட்டுமே உள்ளது. இது 10 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இதை கருத்தில் கொண்டுள்ள மாநகராட்சி ஆணையர், மாநகரில் சந்து& பொந்துகளில் இயங்கி வரும் பெட்டி கடை முதல் பெரிய வர்த்தக நிலையங்கள் வரை அனைத்தும் மாநகராட்சியின் வரி செலுத்தும் பட்டியலின் கீழ் கொண்டுவர தீர்மானித்துள்ளார்.

இதற்காக வரி சான்றிதழ் வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளார். மாநகரில் தற்போது இயங்கி வரும் 8 மண்டலங்களில் பணியாற்றும் இணை மற்றும் துணை ஆணையர்கள், சுகாதார அதிகாரிகள், வரி வசூல் ஆணையர்கள், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று சாலை, தெரு வீதி உள்பட ஆங்காங்கே இயங்கி வரும் கடைகளுக்கு அதன் தகுதிக்கு ஏற்ப வரி வசூல் செய்வதுடன், மாநகராட்சி சார்பில் கடை நடத்துவதற்காக சான்றிதழை அந்த இடத்தில் வழங்கவும் முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் மாநகரில் இயங்கி வரும் அனைத்து வர்த்தகம், தொழில் நிலையங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்து விடும். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது ஆணையர் சித்தையாவின் கருத்தாகவுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் துண்டு அறிக்கை, ஒலிபெருக்கி, பிளக்ஸ் போர்டு ஆகியவற்றின் மூலம் விளம்பரம் படுத்த முடிவு செய்யப்பட்டு ள்ளது. சுமார் 1 மாதம் இதற்கான முகாமை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அனேகமாக ராஜோற்சவ தினமான நவம்பர் 1ம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநகராட்சி வட்டாரம் மூலம் தெரியவருகிறது.