Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதியில் வரி பாக்கி வைத்துள்ள 49697 பேருக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன்              02.11.2010

மாநகராட்சி பகுதியில் வரி பாக்கி வைத்துள்ள 49697 பேருக்கு நோட்டீஸ்

கோவை, நவ.2:கோவை நகரில் வரி பாக்கி வைத் துள்ள 49,697 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட் டீஸ் வழங்கியுள்ளது.

கோவை மாநகராட்சி துணை கமிஷனர் பிரபாகரன் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் வரி நிலுவை வசூல் பணி தீவிரமாக நடக்கிறது. சொத்து வரியாக நடப்பாண்டில் 35 கோடி ரூபாய் வசூலிக்கப்படவேண்டும். ஆனால் இதுவரை 6.6 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் இதுவரை (பழைய வரி நிலுவை சேர்த்து) 69 கோடி ரூபாய் வரி நிலுவை இருக்கிறது. இவற்றை வசூ லிக்க தீவிரமாக முயற்சி எடுக்கப்பட்டது. இந்த பழைய வரி வசூல் மட்டும் ஏறக்குறைய 50 சதவீதத்தை எட்டும் நிலையில் உள்ளது. நேற்று வரை 30 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள் ளது. நடப்பாண்டில் நிலுவை உட்பட 36.6 கோடி ரூபாய் வரி வசூல் நடந்துள்ளது.

கோவை நகரில் தொழில் வரி செலுத்துவோர் 30,309 பேர் உள்ளனர். இந்த எண் ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக நினைக்கிறோம். பலர் தொழில் வரி செலுத்தவில்லை. தொழில் நிறுவனங்கள் மட்டுமே, தொழில் வரி செலுத்தி வரு கிறது. சுயமாக தொழில் நடத்துவோர், தொழில் வரி செலுத்தும் அளவிற்கு சம்பாதிப்பவர்கள் முறையாக தொழில் வரி செலுத்துவதில்லை. இந்த வரி தொடர் பாக ஆய்வு நடக்கிறது. 15 நாளில் இந்த ஆய்வு முடியும். தொழில் வரிக்கு தகுதி யான அனைவருக்கும் வரி விதிக்கப்படும். மாநகராட்சி எல்லைக்குள், தொழில் வரி செலுத்தவேண்டியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கிறோம். வரி விதிப்பிற்கு தகுதியானர்கள் இனி தப்ப முடியாது. மேலும் மாநகராட்சி சார் பில் கட்டப்பட்ட வணிக வளாகம், மார்க்கெட் உள் ளிட்ட பகுதியில் வாடகை அடிப்படையில் கடை நடத்துவோர் உரிய வாடகை தருவதில்லை. ஆண்டிற்கு மாநகராட்சிக்கு சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் வரவேண்டும். ஆனால் பலர் காலம் கடத்தி வந்தனர். உடனடியாக கடை மூடி சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பலர் வாடகை உடனடியாக கட்ட துவங்கினார். அதிரடி நடவடிக்கையால், ஒரிரு மாதத்தில் 7.8 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இன்னும் 2.2 கோடி ரூபாய் வசூலிக்கவேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக வரி நிலுவை வைத்திருப்போர் உடனடியாக வரி செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த வகையில் 49,697 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக வரி செலுத்தவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி, சொத்துக்களை ஜப்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரபாகரன் கூறினார்.