Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் நகராட்சியில் ரூ1.10 கோடி வரி நிலுவை உரிய காலத்தில் செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினகரன்                  23.11.2010

பெரம்பலூர் நகராட்சியில் ரூ1.10 கோடி வரி நிலுவை உரிய காலத்தில் செலுத்த வேண்டுகோள்

பெரம்பலூர், நவ. 23: பெரம்பலூர் நகராட்சியில் ரூ1.10 கோடி வரி நிலுவையில் உள்ளது. உரிய காலத்தில் வரி நிலுவையை செலுத்த வேண்டுமென கலெக்டர் விஜயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர் நகராட்சி யில் தீவிர வரிவசூல் முகாம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று துவங்கியது. வடக்குமாதவி உழவர்சந்தையில் நகராட்சி ஆணை யர் சுரேந்திர ஷா வரவேற் றார். பெரம்பலூர் நகராட்சி வடக்குமாதவி ரோடு உழவர்சந்தையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 4வது, 6வது வார்டுக்கான வரி மற்றும் வரியில்லா இனங் கள் வசூல் சிறப்பு முகாமை கலெக்டர் விஜயக்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி மற்றும் வரி யில்லா இனங்கள் வசூல் மற்றும் மக்களின் குறை களை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த முகாம்கள் 22ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளன. முகாம்கள் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 17 இடங்களில் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகை, கடை வாடகை போன்ற பல்வேறு வரிகளை செலுத்த வேண்டும். ஆனால் தற் போது நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய ரூ1 கோடியே 10 லட்சம் வரி நிலுவையாக உள்ளது. பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறியுள்ள பெரம் பலூர் மேலும் வளர்ச்சி யடைய வேண்டுமென் றால், பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகைகளை முழுமையாக செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் நகராட்சி பகுதிகளில் பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரம்பலூர் நகராட்சியில் 3,500 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ31லட்சம் வரியாக கிடைக்கிறது. மேலும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் 2,200 பொதுகுழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி க்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், பயனாளிகள் உரியகாலத்தில் செலுத்தினால் தான் மக்களுக்கான சேவைகளை தடையின்றி நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்த முடியும் என்பதை அனை வரும் உணரவேண்டும் என்றார்.

முகாமில் துப்புரவு பணி மேற்கொள்ளுதல், கட்டிட அனுமதிக்கான விண்ணப்பங்கள், குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள், சொத்துவரி விதிப்பிற்கான விண்ணப்பங்கள், காலி மனை வரிவிதிப்பிற்கான விண்ணப்பங்கள் நேரடியாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. நகராட்சித்தலைவர் இளையராஜா, துணைத்தலைவர் முகுந்தன், வார்டு கவுன்சிலர்கள் அப்துல்பாருக், மாரிக்கண்ணன், ஈஸ்வரி, புவனேஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.