Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்            07.12.2010

பாதாள சாக்கடை கட்டணம் உயர்த்த மாநகராட்சி முடிவு

மதுரை, டிச. 7: மதுரை நகரில் பாதாள சாக்கடை கட்டணம் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. தற்போதுள்ள மாத கட்டணத்தை வீடுகளுக்கு ரூ.30ல் இருந்து ரூ.125, வணிக கட்டிடங்களுக்கு ரூ. 90ல் இருந்து ரூ.250, தொழிற்சாலைக்கு ரூ.150ல் இருந்து ரூ.375 ஆக உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு ஆண்டுக்கு பாதாள சாக்கடை கட்ட ணம் ரூ. ரூ.360ல் இருந்து ரூ.ஆயிரத்து 500 ஆக உயரும். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.. செயலாளர் தளபதி தலைமையில் கவுஸ்பாட்சா எம்.எல்., கட்சி நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி ஆணை யாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்தி வேல் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் 1396984945 வீடுகளுக்கு பாதாள சாக்கடை கட்டண உயர்வு அதிக அளவாக உள்ளது. முந்தைய அரசு 2003ல் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வை நிறுத்தி வைத்து, தற்போதுள்ள கட்டணத் தையே வசூலிக்க வேண்டும். கட்டண உயர் வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என கோரி உள் ளார். இது குறித்து ஆணை யாளர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறுகையில்,

`மதுரை நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மத்திய, மாநில அரசு நிதி அளித்துள்ளது. மாநகராட்சி பங்கு தொகை ரூ. 55 கோடி கடன் பெற்று அளிக்கப்பட்டுள்ளது. 2003ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க திட்டமிடப்பட்டது.பாதாள சாக்கடை பராமரிப்பு செலவு ஆண் டுக்கு ரூ.36 கோடியாக அதிகரித்துள்ளது. தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட மனு குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றார். மேயர் தேன் மொழி உடன் இருந்தார்.