Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செல்போன் கோபுரங்களுக்கு வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

Print PDF

தினமணி            09.12.2010

செல்போன் கோபுரங்களுக்கு வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

பெங்களூர், டிச. 8: செல்போன் கோபுரங்களுக்கு வரி விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களுக்கு சில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதித்துள்ளன. இதை எதிர்த்து ஹச்சின்சன் எஸ்ஸôர் செüத் இந்தியா உள்பட சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்திருந்தன.

இதில் செல்போன் கோபுரங்கள் அமைக்கும்போது, அந்த கோபுரங்கள் அமைக்கப்படும் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதிபெற்று, இடத்துக்கு உரிய வாடகை செலுத்தியே கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு வரிவிதித்து உள்ளாட்சி அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன. தனியார் இடங்களில் வாடகை செலுத்தி அமைக்கப்படும் செல்போன் கோபுரங்களுக்கு வரி விதிக்க கர்நாடக உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் இடமில்லை. சில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதித்து பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதி எச்.என்.நாக்மோகன்தாஸ் விசாரித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பது:

செல்போன் கோபுரங்கள் அமைக்கும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதற்குரிய வரியை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டும். வரி விதிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் அமைக்கப்படும் கோபுரங்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா, அதனால் மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லையா? என்பதை பார்த்து உரிமம் அளிக்க வேண்டும்.

இதுபோல் வரி வசூலிக்க உள்ளாட்சி சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள எஸ்ஸôர் நிறுவனம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.