Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகாசி நகராட்சியில் நூறு சதவீத வரி வசூல் இலக்கு நிர்ணயம்

Print PDF

தினகரன்             10.12.2010

சிவகாசி நகராட்சியில் நூறு சதவீத வரி வசூல் இலக்கு நிர்ணயம்

ஏழாயிரம்பண்ணை, டிச. 10: சிவகாசி நகராட்சியில் இந்தாண்டு நூறு சதவீத வரி வசூல் செய்ய நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சிவகாசி நகராட்சியில் 27 ஆயிரம் சொத்து வரி விதிப்புகள், 10 ஆயிரத்து 516 குடிநீர் கட்டண இணைப்புகள¢ உள¢ளன. இதன் மூலம் நகராட்சிக¢கு ஆண்டுக¢கு ரூ.6.50 கோடி வருவாய் கிடைக¢கிறது. இதுதவிர தொழ¤ல் வரி இனங்கள¢ மூலம் ரூ. 46.10 லட்சம் வருவாய் கிடைக்கிறது. கடந்தாண்டு நகராட்சியில் நூறு சதவீதம் வரி வசூலிக¢கப்பட்டது. இந்த நித¤ மூலம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தாண்டு இதுவரை 40 சதவீதம் மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சொத்து வரி ரூ.2.40 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.52.70 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொழில் வரியில் அரசு நிறுவனங்களிடம் 95 சதவீதமும், தனியார் நிறுவனங்களிடம் 15 சதவீதமும் வசூலிக¢கப்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சியில் நடப்பு நிதியாண்டில் நூறு சதவீத வரி வசூல் செய்ய அதிகாரிகள¢ திட்ட மிட்டுள்ளனர். இதற்காக வரி வசூல் செய்யும் பணியில் நகராட்ச¤ ஊழ¤யர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். நகராட்சிகளின் நிதி நிலைமையை பொறுத்து சொத்து வரியில் குடியிருப்புகளுக¢கு 25 சதவீதம், தொழிற்சாலைகளுக¢கு 100 சதவீதம், வணிக நிறுவனங்களுக¢கு 150 சதவீதம் வரை உயர்த்தி கொள்ள கடந்த 2008ம் ஆண்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த வரி உயர்வால் சிவகாசி நகராட்சியில் வரி வருவாய¢ ரூ.7 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிவகாசி நகராட்சி ஆணையாளர் (பொ) முருகன் கூறுகையில், ‘‘கடந்தாண்டு நகராட்சியில் நூறு சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. இந்தாண்டும் அதே இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக¢கள் உரிய காலத்திற்குள் வரியை செலுத்த முன்வர வேண்டும்,’’ என்றார்.