Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சி பகுதியில் தீவிர வரி வசூல் முகாம் இன்று தொடக்கம்

Print PDF

தினமணி             14.12.2010

நெல்லை மாநகராட்சி பகுதியில் தீவிர வரி வசூல் முகாம் இன்று தொடக்கம்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலி மாநகர் பகுதியில் தீவிர வரி வசூல் முகாமை செவ்வாய்க்கிழமை (டிச. 14) முதல் மாநகராட்சி நடத்துகிறது.

இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இம் மாநகராட்சிப் பகுதியில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் வார்டு வாரியாக வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி அலுவலகங்களில் வரி செலுத்த முடியாதவர்கள், வீடு தேடி வரும் இந்த வாகனத்தில் வரியை செலுத்தலாம்.

நிலுவை மற்றும் நடப்பு வரியை செலுத்துவதன் மூலம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.

வரி வசூல் வாகனம் வரும் தேதி, இடம்:

14 ஆம் தேதி காலை 12-வது வார்டு போலீஸ் காலனி பகுதி, மாலை 11-வது வார்டு படப்பக்குறிச்சி, திருவண்ணாதபுரம் பகுதி, 15 ஆம் தேதி காலை 19-வது வார்டு பகுதி, மாலை 26-வது வார்டு பகுதி, 16 ஆம் தேதி 41- வது வார்டு பகுதி, 20 ஆம் தேதி காலை 4- வது வார்டு பாலபாக்கியாநகர் பகுதி, மாலை 10- வது வார்டு இந்திராகாலனி பகுதி ஆகிய இடங்களுக்குச் செல்லும்.

இதேபோல 21 ஆம் தேதி 23-வது வார்டுக்குள்பட்ட பகுதிகள், 22 ஆம் தேதி 36- வது வார்டுக்குள்பட்ட பகுதிகள், 23 ஆம் தேதி காலை 44-வது வார்டு கோடீஸ்வரன் நகர் தடிவீரன் கோயில் பகுதி, மாலை 45-வது வார்டு பேட்டை செக்கடி பகுதி, 24 ஆம் தேதி காலை 5- வது வார்டுக்குள்பட்ட செல்விநகர், சிந்துபூந்துறை பகுதி, மாலை 6-வது வார்டுக்குள்பட்ட மதுரை ரோடு, கைலாசபுரம் பகுதி, 27 ஆம் தேதி காலை 24 வது வார்டு பகுதி, மாலை 13-வது வார்டு பகுதி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்.

28 ஆம் தேதி காலை 19-வது வார்டுக்குள்பட்ட பகுதி, மாலை 26-வது வார்டுக்குள்பட்ட பகுதி, 29 ஆம் தேதி 41-வது வார்டுக்குள்பட்ட பகுதி, 30 ஆம் தேதி 36-வது வார்டுக்குள்பட்ட பகுதி, 31 ஆம் தேதி காலை 44- வது வார்டுக்குள்பட்ட பகுதி, மாலை 45-வது வார்டுக்குள்பட்ட பகுதி ஆகிய இடங்களுக்கு இந்த வாகனம் செல்லும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Last Updated on Wednesday, 15 December 2010 05:54