Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"டாப் 16"வரி பாக்கி வைத்துள்ள அரசு அலுவலகங்கள் : வசூலிக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு

Print PDF

தினமலர்           31.12.2010

"டாப் 16"வரி பாக்கி வைத்துள்ள அரசு அலுவலகங்கள் : வசூலிக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள "டாப் 16' அரசு அலுவலகங்கள் பற்றிய விபரம் தெரிய வந்துள்ளது.மதுரை மாநகராட்சிக்கு தனியார் கட்டடங்களைப் போல, அரசு அலுவலகங்களும் சொத்து வரி செலுத்த வேண்டும். ஆண்டுதோறும், மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்கள் இதை வசூல் செய்ய வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக இது கண்டுகொள்ளப்படவில்லை. அரசு அலுவலகங்களின் உயர் அதிகாரிகளும் இதில் கவனம் செலுத்தவில்லை. இப்படியே, பல கோடி ரூபாய் வரி பாக்கி சேர்ந்துள்ளது. இதில் சில அரசு அலுவலகங்கள், "மிரள' வைக்கும் அளவுக்கு பாக்கி வைத்துள்ளன. மாவட்ட விளையாட்டு அலுவலகம் (ரேஸ்கோர்ஸ்) மற்றும் புதூர் "சிட்கோ' அலுவலகங்கள் மட்டும் தலா ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.

அதைத் தொடர்ந்து பாக்கி வைத்துள்ள அரசு அமைப்புகள்:

அரசு போக்குவரத்து கழக கட்டங்கள் - ரூ.80 லட்சம்

வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் - ரூ.56 லட்சம்போலீஸ் ஸ்டேஷன்கள்,
குடியிருப்புகள் - ரூ.50 லட்சம்

பொதுப்பணித்துறை அலுவலகங்கள் - 50 லட்சம்

பூ மார்க்கெட், நெல் மண்டி வளாகம் - ரூ.25 லட்சம்

மத்திய அரசு அலுவகலகங்கள் (வருமான வரி, பி.எஸ்.என்.எல்., தூர்தர்ஷன், ரேடியோ நிலையம், தபால் அலுவலகங்கள்) - ரூ.25 லட்சம்

விரைவு போக்குவரத்து கழக டெப்போ - ரூ.22 லட்சம்

கலெக்டர் அலுவலக கட்டடங்கள் - ரூ.20 லட்சம்

ராமநாதபுர கலெக்டர் பங்களா - ரூ.16 லட்சம்

போலீஸ் கமிஷனர் பங்களா - ரூ.15 லட்சம்

போலீஸ் கமிஷனர் அலுவலகம் - ரூ.13 லட்சம்

கல்வி துறை அலுவலகங்கள் - ரூ.10 லட்சம்

மகளிர் திட்ட அலுவலகம் -ரூ.5 லட்சம்

தீயணைப்பு அலுவலகம் - ரூ.2 லட்சம்

இந்த அலுவலகங்கள் தவிர, சிறு தொகையை பல அலுவலகங்கள் செலுத்த வேண்டி உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகை வசூலானால், மதுரையில் பல வளர்ச்சி பணிகளை செய்யலாம் என மாநகராட்சி நினைக்கிறது. ஆனால் பாக்கி வைத்துள்ளவை அரசு அலுவலகங்கள் என்பதால், கடும் நடவடிக்கை எடுக்க முடியாமல் மாநகராட்சி தவிக்கிறது.