Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரிவாக்க பகுதி குடிநீர் கட்டணம் ஜன., 2 முதல் வசூல் மையங்கள்

Print PDF

தினமலர்         26.12.2011

விரிவாக்க பகுதி குடிநீர் கட்டணம் ஜன., 2 முதல் வசூல் மையங்கள்

சென்னை:மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் குடிநீர் வரி செலுத்த வசதியாக, வசூல் மையங்கள் ஜன., 2 முதல் திறக்கப்படும் என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியில், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், திருவொற்றியூர், கத்திவாக்கம், மாதவரம், மணலி, உள்ளகரம்-புழுதிவாக்கம், மதுரவாயல் என 9 நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் இணைத்து விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், குடிநீர் கட்டணம் வசூலிக்க வசதியாக, ஜன., 2ம் தேதியன்று, குடிநீர் கட்டண வசூல் மையங்கள் திறக்கப்பட உள்ளது.

மையம் அமையும் இடங்கள் திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம், தேரடி தெரு, கத்திவாக்கம் பழைய நகராட்சி அலுவலகம், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி பகுதி அலுவலகங்கள், கொரட்டூர் தண்ணீர் தொட்டி, வெங்கடராமபுரம் சமுதாய மையம், மதுரவாயல் பூந்தமல்லி சாலை, ஆலப்பாக்கம் குடிநீர் நிரப்பு மையம், ஆதம்பாக்கம் பார்த்தசாரதி தெரு, நங்கநல்லூர், பி.வி.நகர், ஆதம்பாக்கம் மேல்நிலைத் தொட்டிகள் உள்ள இடங்கள் என 17 இடங்களில் இந்த மையங்கள் அமைகின்றன.ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளோர், வரி வசூலிப்போரிடம் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, 38 பணிமனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை 'ஞிட்தீண்ண்ஞ' என்ற பெயரில் காசோலை, வங்கி வரைவோலையாகவும் செலுத்தலாம்.