Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு வரியை மறுசீராய்வு செய்ய கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர்     23.08.2012

வீட்டு வரியை மறுசீராய்வு செய்ய கலெக்டர் உத்தரவு

உசிலம்பட்டி:""வீட்டு வரியை முழுமையாக வசூலித்தும், குறைந்த மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகளை மறுஆய்வு செய்தும் உசிலம்பட்டி நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கலாம்,'' என, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறினார்.உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில், கலெக்டர் தலைமையில் நேற்று மனுநீதிநாள் நடந்தது. அவர் பேசுகையில், ""கிராம மக்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை வழங்குகிறது. ரூ.7.50 லட்சத்தில், நடுப்பட்டியில் சுகாதார வளாகம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்,'' என்றார். பின், உசிலம்பட்டி
நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

தலைவர் பஞ்சம்மாள், கமிஷனர் பாப்பம்மாள் மற்றும் கவுன்சிலர்கள், "சந்தை திடல் உட்பட பல இடங்கள் ஊராட்சிஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நகராட்சிக்கு வருமானம் பாதிக்கிறது' என்றனர்.கலெக்டர், ""நகராட்சியின் வருமானத்தை பெருக்க பலவழிகள் உள்ளன. வீட்டு வரியை முழுமையாக வசூலித்தல், குறைந்த மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகளை மறுஆய்வு செய்து வரியை கூட்டுதல், அரசு அலுவலகங்களில் இருந்து சொத்துவரி வசூலித்தல் மூலம் வருவாய் ஈட்டலாம். வரிகளை முழுமையாக வசூலித்தால் மட்டுமே அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும்,'' என்றார்.