Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு இப்போதைக்கு பழைய சொத்து வரி!

Print PDF
தினமணி                   28.02.2013

இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு  இப்போதைக்கு பழைய சொத்து வரி!


திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, ஆலத்தூர், கிழக்கல்கண்டார்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு பழைய கணக்கீட்டின் அடிப்படையிலேயே சொத்து வரி வசூலிக்க மாமன்றம் ஒப்புதல் அளித்தது. 60 வார்டுகளாக இருந்த திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பகுதி பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 65 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இணைக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே அந்தந்த ஊராட்சிகளில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதே கணக்கீட்டில் சொத்து வரியை வசூலிக்க புதன்கிழமை திருச்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

60 வார்டுகளின் சொத்து வரி (ஒரு சதுர அடிக்கு- ஏ,பி,சி,டி மண்டலங்கள் வரிசைப்படி): குடியிருப்புப் பகுதிகள்- ரூ. 1.20, 1.00, 0.80, 0.70. வணிகப் பகுதிகள்- ரூ. 2.40, 2.00, 1.60, 1.40. தொழிற்சாலைகள்- ரூ. 3.60, 3.00, 2.40, 2.10.

இணைக்கப்பட்ட பகுதிகளில், திருவெறும்பூர் பேரூராட்சியில் பழைய சொத்து வரி (ஒரு சதுர அடிக்கு- ஏ,பி,சி மண்டலங்கள் வரிசைப்படி):
குடியிருப்பு- ரூ. 0.75, 0.50, 0.30. வணிகம்- ரூ. 2.25, 1.50, 0.90. தொழிற்சாலை- ரூ. 1.50, 1.00, 0.70. பாப்பாக்குறிச்சி ஊராட்சியில் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிக்கு அடிப்படைக் கட்டணம் ரூ. 0.25.

எல்லக்குடி ஊராட்சியில் குடியிருப்புக்கு ரூ. 0.30, வணிகப் பகுதிக்கு ரூ. 0.50. ஆலத்தூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு ரூ. 0.25, வணிகப் பகுதிக்கு ரூ. 0.25. கீழக்கல்கண்டார்கோட்டை ஊராட்சியில் குடியிருப்புக்கு ரூ. 0.20, வணிகப் பகுதிக்கு ரூ. 0.25.

இந்த மூன்று ஊராட்சிகளிலும் வீட்டு வரி:

கூரை வீட்டுக்கு ரூ. 40, தொகுப்பு வீட்டுக்கு ரூ. 50. அரசின் அடுத்த அறிவிப்பு வரும்வரை இதே பழைய கட்டணத்தையே வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
Last Updated on Friday, 01 March 2013 09:19