Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கி வசூலிக்க இலக்கு நிர்ணயம்

Print PDF

தினத்தந்தி               23.03.2013

கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கி வசூலிக்க இலக்கு நிர்ணயம்

கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

14 நகராட்சி நிர்வாகங்கள்

கரூர் நகராட்சி அலுவல கத்தில் வரி வசூலிப்பு மையம் இயங்கி வருகிறது. இதனுடன் கூடுதலாக இனாம் கரூர், தாந்தோணி நகராட்சியிலும் வரி வசூல் மையங்கள் கணினி மூலமாக இணைக்கப்பட்டு செயல்படுகிறது. இதுதவிர குறிப்பிட்ட வங்கிகளிலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் , சொத்து வரி, கடை வாடகை போன்ற வற்றை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு இருக் கிறது.

கரூர் உள்பட 14 நகராட்சி நிர்வாகங்கள் சேலம் நகராட்சி மண்டலத்தில் இணைக்கப் பட்டுள்ளது. கடந்த 19ந் தேதி சேலத்தில் வரி வசூல் தொடர்பான கூட்டம் நடை பெற்றது. இதில் நகராட்சி களின் நிர்வாக இணை இயக்குனர் கலந்து கொண்டு வரி வசூல் ஆய்வு பணி மேற் கொண்டார்.

அப்போது வரி வசூலில் இலக்கை அடையும் நகராட்சி களுக்கு அரசின் சிறப்பு மானிய தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.அதன்படி கரூர் நகராட்சியில் 95 சதவீத வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வரி வசூல்

இதன்படி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய் அதிகாரி சுருளிநாதன், ஆய்வர் ஜலால் ஆகியோர் வரி வசூலில் ஈடுபட்டு உள்ளனர். மக்கள் பாதையில் வரி வசூல் நடைபெற்றது. இதில் வரி நிலுவை வைத்திருப் பவர்கள் பலர் வந்து வரியை செலுத் தினர். குடிநீர் கட்டணம் பாக்கி வைத்திருப் பவர் களிடம் பாக்கியை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது.

அரசின் சிறப்பு மானியம்

95 சதவீத வரியை இம்மாத இறுதிக்குள் வசூல் செய்தால் கரூர் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு அரசின் சிறப்பு மானியம் கிடைக்கும் என அலுவலர்கள் தெரிவித் தனர்.