Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைத் தொட்டி வைத்து நூதன வரி வசூல்

Print PDF
தினமணி          24.03.2013

குப்பைத் தொட்டி வைத்து நூதன வரி வசூல்


வரி செலுத்தாவர்கள் வசிக்கும் வீடு, கடை, வணிக வளாகம் ஆகியவற்றின் முன்பகுதியில் குப்பைத் தொட்டியை வைத்து பண்ருட்டி நகர நிர்வாகம் நூதன முறையில் வரி வசூல் செய்து வருகிறது.

பண்ருட்டி நகராட்சிக்கு வீடு, சொத்து, தொழில் மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகள் மூலம் ரூ.4.50 கோடி வரி பாக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் பல ஆண்டுகளாக வரி செலுத்தாத பெரும் பணக்காரர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

நிதிப் பற்றாக்குறையால் நகரின் அத்தியாவசியப் பணிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் செய்ய முடியவில்லை. இதை சமாளிக்கும் பொருட்டு தீவிர வசூல் செய்யப்படுகிறது.

தற்போது வரி செலுத்தாதவர்களிடம் இருந்து வரி வசூல் செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நீண்ட நாள் வரி செலுத்தாத வீடு, கடை, வணிக வளாகம் உள்ளிட்ட உரிமையாளர்கள் யார் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் பெயர், செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை ஆட்டோவில் அவர்கள் பகுதிகளுக்குச் சென்று ஒலிபெருக்கி மற்றும் டாம் டாம் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இதேபோல் குடிநீர் கட்டணமும் செலுத்தாமல் உள்ளனர். இக்கட்டணத்தைச் செலுத்தாதவர்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியில் நகராட்சி  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் ஜப்தி நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

முறையான அறிவிப்பும் கால அவகாசமும் அளித்தும் வரி பாக்கி செலுத்தாத வீடு, கடை மற்றும் வணிக வளாகங்கள் முன்பு நகர நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை வைத்து நூதன முறையில் வரி வசூல் செய்து வருகிறது.