Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காங்கிரஸ் கட்சி: மாநகராட்சிக்கு ரூ.22 லட்சம் சொத்து வரி பாக்கி

Print PDF
தினமலர்      02.04.2013

காங்கிரஸ் கட்சி: மாநகராட்சிக்கு ரூ.22 லட்சம் சொத்து வரி பாக்கி


சென்னை:காங்கிரஸ் கட்சி, சென்னை மாநகராட்சிக்கு, 22 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தாமல்,
இழுத்தடிப்பு செய்து வருகிறது.

தேனாம்பேட்டையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்குச் சொந்தமாக, காமராஜர் அரங்கமும், அதை ஒட்டி, வணிக வளாகமும் உள்ளன. இரண்டு அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில், ஏராளமான கடைகள் உள்ளன. இவற்றின் மூலம், காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, மாதம் தோறும் வாடகையாக, பல லட்சம் ரூபாய், வருவாய் கிடைத்து வருகிறது.

மாநகராட்சி சார்பில், காமராஜர் அரங்கம், வணிக வளாகம் பகுதிகளுக்கு, தெருவிளக்கு, மழைநீர் தேங்காமல் தடுத்தல் போன்ற பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் அறக்கட்டளை, 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை, மாநகராட்சிக்கு, 22 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும்.

ஆனால், சொத்து வரி செலுத்த சொல்லி, காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகளை, மாநகராட்சி வருவாய் அதிகாரிகள், பலமுறை கேட்டும், அதற்கு எந்தவித பதிலும் அளிக்காததுடன், வரி செலுத்தாமலும், இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.