Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரைக்காலில் வரி வசூல் முகாம்:நாளை தொடங்குகிறது

Print PDF
தினமணி        07.04.2013

காரைக்காலில் வரி வசூல் முகாம்:நாளை தொடங்குகிறது


காரைக்காலில் திங்கள்கிழமை (ஏப். 8) முதல் மே. 2-ம் தேதி வரை நகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் முகாம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையர் கே. ரேவதி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியினர், 2013-14-ம் ஆண்டுக்கானசொத்து வரி, தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி மற்றும் இதர வரிகள், வரி பாக்கிகளை ஒவ்வொரு வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏப். 8-ம் தேதி திங்கள்கிழமை வலத்தெரு நடுநிலைப் பள்ளி, 9-ம் தேதி அம்மையார் கோவில், 10-ல் புதுத்துறை சமுதாயக் கூடம், 11-ல் தருமபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, 12-ல் செபஸ்தியார் கோவில், 13-ல் பச்சூர் அரசு தொடக்கப் பள்ளி, 15-ல் கீழகாசாக்குடி சமுதாயக்கூடம், 16-ல் தலத்தெரு தங்கமாரியம்மன் கோவில், 17-ல் நேரு நகர் பிள்ளையார் கோவில், 18-ல் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில், 19-ல் எம்.எம்.ஜி. நகர் பிள்ளையார் கோவில், 20-ல் காரைக்கால்மேடு சமுதாயக் கூடம், 22-ல் கிளிஞ்சல்மேடு ரேணுகாதேவி அம்மன் கோவில், 23-ல் அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 24-ல் மாரியம்மன் கோவில் தெரு ராமலிங்க சுவாமி மடம், 25-ல் நகராட்சி திருமண மண்டபம், 16-ல் மு.வி.ச. உயர்நிலைப் பள்ளி, 27-ல் சேத்திலால் நகர் அரசு நடுநிலைப் பள்ளி, 29-ல் மேலஓடுதுறை சமுதாயக்கூடம், 30-ல் கீழஓடுதுறை சமுதாயக் கூடம், மே.1-ம் தேதி கருக்களாச்சேரி திருமண மண்டபம், 2-ல் அக்கரைவட்டம் அரசு நடுநிலைப் பள்ளி.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்று வரிகைகளை செலுத்திட வேண்டும். தவறினால் நகராட்சி சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.