Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பண்ருட்டி நகராட்சியில் ரூ.3 கோடி வரி பாக்கி

Print PDF

தினமணி 20.01.2010

பண்ருட்டி நகராட்சியில் ரூ.3 கோடி வரி பாக்கி

பண்ருட்டி,ஜன.19: பண்ருட்டி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆணையர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பண்ருட்டி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.2 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.45 லட்சம், குத்தகை இனம் ரூ.35 லட்சம், தொழில் வரி ரூ.20 லட்சம் ஆக மொத்தம் ரூ.3 கோடி நிலுவையில் உள்ளது.

÷எனவே வரி செலுத்த வேண்டியவர்கள் அலுவலக நாட்களிலும், சனிக்கிழமைகளில் நகராட்சி கணினி மையத்தில் வரி இனத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்படும் என ஆணையர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:25