Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வரி செலுத்தாத 30 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமணி 28.01.2010

குடிநீர் வரி செலுத்தாத 30 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

மதுரை, ஜன. 27: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வரி செலுத்தாத 30 குடிநீர் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வரி ரூ.10 கோடி வரை நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்கும் வகையில் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மதுரை கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட குயவர்பாளையம், அனுப்பானடி, கீரைத்துறை, கீழ்மதுரை காலனி உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆணையர் (கிழக்கு) அங்கயற்கண்ணி, உதவிப் பொறியாளர்கள் காமராஜ், கனி, விஜயகுமார், மல்லிகா மற்றும் வரித் தண்டலர்கள் ஆய்வு செய்தனர். குடிநீர் வரி செலுத்தாத 30 இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 30}ல் இறைச்சி விற்பனைக்குத் தடை: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி ஜனவரி 30}ம் தேதி மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி வதை செய்யும் இடங்களுக்கு விடுமுறை அவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை மீறிச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 28 January 2010 09:59