Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பர பலகை அமைக்க அரியலூரில் கட்டணம்

Print PDF

தினமலர் 02.02.2010

விளம்பர பலகை அமைக்க அரியலூரில் கட்டணம்

அரியலூர்,: அரியலூரில் விளம்பர பலகை அமைப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.அரியலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவி விஜயலட்சுமி தலைமை யில் நடந்தது. செயல் அலுவலர் சமயசந்திரன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஏழைகள் நலனுக்காக 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக கட்டி கொடுக்க முன்னோடி திட்டம் அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி பகுதியில் விளம்பர பதாகைகள், பலகைகள், தட்டிகள் தற்காலிகமாக நிறுவுவதற்கும், நிரந்தரமாக நிறுவி விளம்பரம் செய்வதற்கும், சதுரமீட்டரில் விளம்பர வரி வசூல் செய்வது, நகராட்சி பகுதியில் நலிவடைந்த பிரிவினர் சராசரி மாத வருமானம் ரூ.3 ஆயிரத்து 300 மற்றும் குறைந்த வருமானம் உடைய பிரிவினருக்கு (சராசரி மாத வருமானம் ரூ.3 ஆயிரத்து 301 முதல் 7 ஆயிரத்து 300 வரை) நீண்ட கால வீட்டு கடன் பெற்று வீடு கட்டி கொள்வதற்கும், அதற்கான ஆண்டு வட்டியில் 5 சதவீதத்தை மானியமாக வழங்குவது குறித்து ஐஎஸ்எச்யுபி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அரசாணையின்படியும் மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படியும் பயனாளிகளை தேர்வு செய்வது ,அரியலூர் நகராட்சிக்கு எஸ்ஐஎஸ்ஆர்ஒய் திட்டத்தின் கீழ் 2008-09ம் ஆண்டிற்கு சமுதாய கட்டமைப்பு தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.51 ஆயிரம் மற்றும் 09-10ம் ஆண்டிற்கு சமுதாய கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.40 ஆயிரத்து 937 மற்றும் ஓ அண்ட் ஓசி கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.22 ஆயிரத்து 248க்கு ஸ்டில் டிரெயினிங் பிரோக்கிராம் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, குணா, சந்திரசேகர், மணிவண்ணன், பாபு, சிவஞானம், ராஜா, பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:06