Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனம் நகராட்சியில் வரி வசூலிக்க குழுக்கள் அமைப்பு

Print PDF

தினமலர் 04.02.2010

திண்டிவனம் நகராட்சியில் வரி வசூலிக்க குழுக்கள் அமைப்பு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் வரி வசூல் செய்வதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.திண்டிவனம் நகராட்சியில் கடந்த 10 நாட்களுக்கு முன் நகராட்சிகளின் வேலூர் மண்டல நிர்வாக இயக்குனர் பாலப்ரமணியன் ஆய்வு நடத்தினார். அதில் நகராட்சி நிர்வாகம் வரி வசூலில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு சென்றார். இதை தொடர்ந்து ஆணையர் முருகேசன் உத்தரவின்பேரில் நகரில் தீவிர வரி வசூல் செய்ய குழுக்கள் அமைக்கப் பட் டுள்ளது. இன்ஜினியர் பரமசிவம், ஜூனியர் இன்ஜினியர் பவுல் செல்வம், நகர அளவை ஆய்வாளர் வெங் கடேசன், கணக்கர் ரவி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜரத்தினம், சரவணன், ஜோதிபாசு, பணி ஆய்வாளர் சரவணன், உதவியாளர்கள் மங்கையற்கரசி, சந்திரா ஆகிய 11 பேருக்கும் தலா மூன்று வார்டுகள் என ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பந்தப்பட்ட பகுதி பில் கலெக்டர்கள், ஒரு அலுவலக உதவியாளர் நியமனம் செய்யப் பட்டுள் ளனர். இந்த குழுவினர் தீவிர வரி வசூலில் ஈடுபட உத்தரவிடப்பட் டுள்ளது. நகராட்சி வரி செலுத்த தவறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் முருகேசன் கூறினார்.

Last Updated on Thursday, 04 February 2010 06:15