Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்து வரி வசூலிக்க கையடக்க கருவி சென்னை மாநகராட்சியில் அறிமுகம்

Print PDF

தினமலர் 03.03.2010

சொத்து வரி வசூலிக்க கையடக்க கருவி சென்னை மாநகராட்சியில் அறிமுகம்

சென்னை :""சென்னை நகரில் கூடுதல் கட்டுமான கட்டடங்களை கண்டறிந்து சொத்து வரி வசூலிக்க வேண்டும்.நிர்ணயித்த இலக்கைத் தாண்டி சொத்து வரி வசூலிக்கும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் பேசினார்.சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்போர், கையில் கொண்டு செல்ல வசதியாக, கையடக்க வரி வசூல் கருவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று, மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. வரி வசூலிப்போர் 300 பேருக்கு, கையடக்க வரி வசூல் கருவிகளை மேயர் சுப்ரமணியன் வழங்கி பேசியதாவது:

சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிக்க பல எளிமையான முறைகளை அமல் படுத்தி வருகிறது.வீடு வீடாகச் சென்று சொத்து வரி வசூலித்தல், ஆன்-லைன் மூலம் வரி வசூலித்தல், மண்டல அலுவலக பிரத்யேக கவுன்டர்கள் மூலம் வரி வசூல், தலைமை அலுவலகத்தில் வசூல் செய்தல், பிளாக்பெரி கருவி மூலம் வசூல் செய்தல் போன்ற பல்வேறு வகைகளில் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது.மேலும், எளிமையாக வசூல் செய்யவும், மாநகராட்சி கணக்கில் வரவு வைத்த விவரத்தை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்ட, கையடக்க வரி வசூல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவியில் சம்பந்தப் பட்ட சொத்து உரிமையாளரின், பின் நம்பரை பதிவு செய்தால், அந்த பின் நம்பருக்குரிய சொத்து வரி விவரம் தெரிய வரும்.அதை வைத்து பாக்கி இருக்கும் சொத்து வரியை செலுத்தலாம். அதற்குரிய ரசீது அந்த கருவி மூலம் உடனே பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 300 சொத்து வரி வசூலிப் பாளர்களுக்கு இக்கருவி வழங் கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 94 லட்சம் ரூபாய். இந்த கருவியில் கிரெடிட் கார்டு மூலமும் சொத்து வரி கட்டலாம். அத்துடன் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட வரி வசூலிக்கும் முறையை அமல்படுத்த தொலைபேசி மூலம் ஒருங் கிணைந்து, "ஐவிஆர்எஸ்' சேவைத் திட்டமும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2006-07 ஆண்டு மாநகராட்சி சொத்து வரி வசூல் 231.94 கோடி ரூபாயாக இருந்தது. 2007-08ம் ஆண்டு சொத்து வரி உயர்வு ஏதும் இல்லாமல் 291.26 கோடி ரூபாய் வசூலானது. 2008-09ம் ஆண்டில் 300 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வசூலிக்க இலக்க நிர்ணயிக் கப்பட்டு, 323.80 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது.இந்த ஆண்டு 350 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 301 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள் ளது.இதற்கு களப்பணியாளர் களாக செயல்படும் வரி வசூலிப்போரே முக்கிய காரணம்.சொத்து வரி வசூலிப்போர், நகரில் கட்டப்படும் கூடுதல் கட்டுமானப் பணிகளை கவனிப்பதில்லை.நகரில் புதிய கட்டடங்கள் உருவாக வாய்ப் பில்லாத நிலையில், இருக்கும் கட்டடங்களில் கூடுதல் கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது.

மாநகராட்சியில் அந்தந்த வார்டு ஜூனியர் இன்ஜினியர்கள், உதவி இன்ஜினியர்கள் வருவாய்த்துறையுடன் ஒருங் கிணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி செய்தால், மேலும் கூடுதல் சொத்து வரி வசூல் செய்ய வாய்ப்பு ஏற்படும். அதோடு வணிக ரீதியாக செயல்படும் கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக சொத்து வரி வசூல் செய்யும் ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள் ளது.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.கமிஷனர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.சொத்து வரி வசூலிப் பாளர்களுக்கு கையடக்க கருவியை பயன் படுத்தும் முறை குறித்து பயிற்சியும் அளிக்கப் பட்டது.

Last Updated on Wednesday, 03 March 2010 06:30