Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் முகாம்

Print PDF

தினகரன்             15.12.2010

கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் முகாம்

திருச்சி, டிச 15: திருச்சி மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல் இன்று முதல் 18ம் தேதி வரை கோ.அபிஷேகபுரம் கோட்ட பகுதியில் வரி வசூல் செய்யப்படுகிறது.

15ம் தேதி காலை 57வது வார்டு 10&10.30 காவேரி கல்லூரி, 10.30&11 திருத்தாந் தோணி ரோடு (ஜெயம் மருத்துவமனை அருகில்), 58வது வார்டு காலை 11&11.30 பாண்டமங்கலம் அக்ரஹாரம், 11.30&12 நவாப் தோட்டம் கவுன்சிலர் அலுவலகம், 12&1 பஞ்சவர்ணசுவாமி கோவில் தெரு.

59வது வார்டு 1&1.30 வாலாஜா ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உறையூர் வடக்கு, 1.30&2 நாச்சியார்பாளையம், 2&2.30 நாச்சியார்கோவில் (எஸ்எம் மேல்நிலைப்பள்ளி அருகில்), 2.30&3 வண்டிக்காரத் தெரு, 3&3.30 வடக்கு வெள்ளாளத் தெரு கவுன்சிலர் அலுவலகம், 3.30&4 பாத்திமா நகர் அசோஷியேஷன் கட்டடம் அருகில், 4&4.30 தியாநகராஜ நகர் பிள்ளையார் கோவில் அருகில், 4.30&5 லிங்க நகர் மெயின்ரோடு.

16ம் தேதி 50வது வார்டு 10&11 அண்ணா நகர், 11&11.30 விஸ்வநாதபுரம், 11.30&12 சேஷபுரம், 12&12.30 விநாயகபுரம், 12.30&2 தென்னூர் ஹைரோடு, 51வது வார்டு 2&3 ஜெனரல் பஜார் ரோடு, 3&3.30 மூலைக் கொல்லைத் தெரு, 3.30 & 4 விஎன்பி தெரு, 4&5 அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் வசூல் செய்யப்படும்.

18ம் தேதி காலை 10&10.30 காயிதே மில்லத் நகர், 10.30&11 காஜாதோப்பு, 11&12 பாரதிநகர், 12&1 அண்டகொண்டான் ஆகிய இடங்களில் வசூல் செய்யப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் பால்சாமி தெரிவித்துள்ளார். இன்று முதல் 18ம் தேதி வரை நடக்கிறது

 

நெல்லை மாநகராட்சி பகுதியில் தீவிர வரி வசூல் முகாம் இன்று தொடக்கம்

Print PDF

தினமணி             14.12.2010

நெல்லை மாநகராட்சி பகுதியில் தீவிர வரி வசூல் முகாம் இன்று தொடக்கம்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலி மாநகர் பகுதியில் தீவிர வரி வசூல் முகாமை செவ்வாய்க்கிழமை (டிச. 14) முதல் மாநகராட்சி நடத்துகிறது.

இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இம் மாநகராட்சிப் பகுதியில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் வார்டு வாரியாக வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி அலுவலகங்களில் வரி செலுத்த முடியாதவர்கள், வீடு தேடி வரும் இந்த வாகனத்தில் வரியை செலுத்தலாம்.

நிலுவை மற்றும் நடப்பு வரியை செலுத்துவதன் மூலம் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.

வரி வசூல் வாகனம் வரும் தேதி, இடம்:

14 ஆம் தேதி காலை 12-வது வார்டு போலீஸ் காலனி பகுதி, மாலை 11-வது வார்டு படப்பக்குறிச்சி, திருவண்ணாதபுரம் பகுதி, 15 ஆம் தேதி காலை 19-வது வார்டு பகுதி, மாலை 26-வது வார்டு பகுதி, 16 ஆம் தேதி 41- வது வார்டு பகுதி, 20 ஆம் தேதி காலை 4- வது வார்டு பாலபாக்கியாநகர் பகுதி, மாலை 10- வது வார்டு இந்திராகாலனி பகுதி ஆகிய இடங்களுக்குச் செல்லும்.

இதேபோல 21 ஆம் தேதி 23-வது வார்டுக்குள்பட்ட பகுதிகள், 22 ஆம் தேதி 36- வது வார்டுக்குள்பட்ட பகுதிகள், 23 ஆம் தேதி காலை 44-வது வார்டு கோடீஸ்வரன் நகர் தடிவீரன் கோயில் பகுதி, மாலை 45-வது வார்டு பேட்டை செக்கடி பகுதி, 24 ஆம் தேதி காலை 5- வது வார்டுக்குள்பட்ட செல்விநகர், சிந்துபூந்துறை பகுதி, மாலை 6-வது வார்டுக்குள்பட்ட மதுரை ரோடு, கைலாசபுரம் பகுதி, 27 ஆம் தேதி காலை 24 வது வார்டு பகுதி, மாலை 13-வது வார்டு பகுதி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்.

28 ஆம் தேதி காலை 19-வது வார்டுக்குள்பட்ட பகுதி, மாலை 26-வது வார்டுக்குள்பட்ட பகுதி, 29 ஆம் தேதி 41-வது வார்டுக்குள்பட்ட பகுதி, 30 ஆம் தேதி 36-வது வார்டுக்குள்பட்ட பகுதி, 31 ஆம் தேதி காலை 44- வது வார்டுக்குள்பட்ட பகுதி, மாலை 45-வது வார்டுக்குள்பட்ட பகுதி ஆகிய இடங்களுக்கு இந்த வாகனம் செல்லும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Last Updated on Wednesday, 15 December 2010 05:54
 

சிவகாசி நகராட்சியில் நூறு சதவீத வரி வசூல் இலக்கு நிர்ணயம்

Print PDF

தினகரன்             10.12.2010

சிவகாசி நகராட்சியில் நூறு சதவீத வரி வசூல் இலக்கு நிர்ணயம்

ஏழாயிரம்பண்ணை, டிச. 10: சிவகாசி நகராட்சியில் இந்தாண்டு நூறு சதவீத வரி வசூல் செய்ய நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சிவகாசி நகராட்சியில் 27 ஆயிரம் சொத்து வரி விதிப்புகள், 10 ஆயிரத்து 516 குடிநீர் கட்டண இணைப்புகள¢ உள¢ளன. இதன் மூலம் நகராட்சிக¢கு ஆண்டுக¢கு ரூ.6.50 கோடி வருவாய் கிடைக¢கிறது. இதுதவிர தொழ¤ல் வரி இனங்கள¢ மூலம் ரூ. 46.10 லட்சம் வருவாய் கிடைக்கிறது. கடந்தாண்டு நகராட்சியில் நூறு சதவீதம் வரி வசூலிக¢கப்பட்டது. இந்த நித¤ மூலம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தாண்டு இதுவரை 40 சதவீதம் மட்டுமே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சொத்து வரி ரூ.2.40 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.52.70 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொழில் வரியில் அரசு நிறுவனங்களிடம் 95 சதவீதமும், தனியார் நிறுவனங்களிடம் 15 சதவீதமும் வசூலிக¢கப்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சியில் நடப்பு நிதியாண்டில் நூறு சதவீத வரி வசூல் செய்ய அதிகாரிகள¢ திட்ட மிட்டுள்ளனர். இதற்காக வரி வசூல் செய்யும் பணியில் நகராட்ச¤ ஊழ¤யர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். நகராட்சிகளின் நிதி நிலைமையை பொறுத்து சொத்து வரியில் குடியிருப்புகளுக¢கு 25 சதவீதம், தொழிற்சாலைகளுக¢கு 100 சதவீதம், வணிக நிறுவனங்களுக¢கு 150 சதவீதம் வரை உயர்த்தி கொள்ள கடந்த 2008ம் ஆண்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த வரி உயர்வால் சிவகாசி நகராட்சியில் வரி வருவாய¢ ரூ.7 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிவகாசி நகராட்சி ஆணையாளர் (பொ) முருகன் கூறுகையில், ‘‘கடந்தாண்டு நகராட்சியில் நூறு சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. இந்தாண்டும் அதே இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக¢கள் உரிய காலத்திற்குள் வரியை செலுத்த முன்வர வேண்டும்,’’ என்றார்.

 


Page 38 of 148