Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

செல்போன் கோபுரங்களுக்கு வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

Print PDF

தினமணி            09.12.2010

செல்போன் கோபுரங்களுக்கு வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

பெங்களூர், டிச. 8: செல்போன் கோபுரங்களுக்கு வரி விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களுக்கு சில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதித்துள்ளன. இதை எதிர்த்து ஹச்சின்சன் எஸ்ஸôர் செüத் இந்தியா உள்பட சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்திருந்தன.

இதில் செல்போன் கோபுரங்கள் அமைக்கும்போது, அந்த கோபுரங்கள் அமைக்கப்படும் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதிபெற்று, இடத்துக்கு உரிய வாடகை செலுத்தியே கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு வரிவிதித்து உள்ளாட்சி அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன. தனியார் இடங்களில் வாடகை செலுத்தி அமைக்கப்படும் செல்போன் கோபுரங்களுக்கு வரி விதிக்க கர்நாடக உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் இடமில்லை. சில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதித்து பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதி எச்.என்.நாக்மோகன்தாஸ் விசாரித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பது:

செல்போன் கோபுரங்கள் அமைக்கும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதற்குரிய வரியை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டும். வரி விதிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் அமைக்கப்படும் கோபுரங்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா, அதனால் மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லையா? என்பதை பார்த்து உரிமம் அளிக்க வேண்டும்.

இதுபோல் வரி வசூலிக்க உள்ளாட்சி சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள எஸ்ஸôர் நிறுவனம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

நிலுவை வரியை வசூலிக்க தீவிர நடவடிக்கை: மாநகராட்சி கமிஷனர்

Print PDF

தினமணி              09.12.2010

நிலுவை வரியை வசூலிக்க தீவிர நடவடிக்கை: மாநகராட்சி கமிஷனர்

மதுரை, டிச.8: மதுரை மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களிலிருந்து ரூ.80 கோடி வரை வரிகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலுவை வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 1,60,171 வரி விதிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம், இந்தாண்டு ரூ.50 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கில் இதுவரை ரூ.24 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குடிநீர்க் கட்டணம், பாதாளச் சாக்கடைக் கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி, மாநகராட்சி கடைகளுக்கான வாடகை பாக்கிக் கட்டணம் உள்பட ரூ.80 கோடி வரை வரிகள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதில், அரசுக் கட்டடங்கள் மூலம் மட்டும் ரூ.8 கோடி வரை வரி செலுத்தப்படாமல் உள்ளன.

நகரில் வசதி படைத்தவர்கள், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள்கூட அதிகளவில் வரிப் பாக்கி வைத்துள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜப்தி போன்ற நடவடிக்கைக்கு உள்ளாகாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பொதுமக்கள் வரிகளைச் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்.

தற்போது பெய்துவரும் மழையால் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதுபோன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையைச் சீரமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில இடங்களில் துவக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போது சாலைகளில் தூசி அதிக அளவில் உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாநகராட்சி சார்பில் தூசியை அகற்றும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மின்வாரியம் சார்பில் ரூ.49 கோடி: மின்வாரியம் சார்பில், மாநகராட்சிக்கு ரூ.49 கோடி வரி செலுத்தப்பட வேண்டும். தெரு விளக்குகளுக்கு ஆகும் மின் கட்டணத்தை அந்த வரியிலிருந்து மாநகராட்சி கழித்துக் கொண்டு வருகிறது. மற்றபடி அலுவலகம், பள்ளி போன்றவற்றுக்கான மின் கட்டணத்தை மாநகராட்சி செலுத்தி வருகிறது. வரிப் பாக்கியை வசூலிப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

பேட்டியின்போது மாநகராட்சி துணை கமிஷனர் க. தர்ப்பகராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மதுரை மாநகராட்சியில் ரூ80 கோடி வரி பாக்கி வசூலிக்க நடவடிக்கை கமிஷனர் பேட்டி

Print PDF

தினகரன்                09.12.2010

மதுரை மாநகராட்சியில் ரூ80 கோடி வரி பாக்கி வசூலிக்க நடவடிக்கை கமிஷனர் பேட்டி

மதுரை, டிச. 9: மதுரை மாநகராட்சியில் ரூ80 கோடி வரி பாக்கி உள்ளது. இதனை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கமிஷனர் கூறினார்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 177 சொத்து வரி விதிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு வசூலாக வேண்டிய ரூ50 கோடி சொத்து வரியில், இதுவரை ரூ24 கோடிதான் வசூலாகி உள்ளது. முந்திய ஆண்டு வரிகள் ரூ15 கோடி வசூலாகவில்லை. இதுதவிர காலி மனை வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி, மாநகராட்சி கடை வாடகை என அதிகம் வசூலாகவில்லை. அனைத்தும் சேர்ந்து மொத்தம் ரூ80 கோடி வசூலாகாமல் பாக்கி உள்ளது. இதில் அரசு கட்டிடங்களின் வரி மட்டும் ரூ8 கோடி. அந்த அலுவலகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றன. வசதி படைத்தோர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வரியை செலுத்தாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். பாக்கியை வசூலிக்க ஜப்தி மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு வழங்கிய ரூ33 கோடியில் 117 சாலைகள் புதுப்பிக்க உத்தரவு வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கி உள்ளன. சாலைகளில் படிந்துள்ள புழுதியை துப்புரவு பணியாளர் மூலம் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காலையில் குப்பை அகற்றும் பணியும், பிற்பகலில் புழுதியை அகற்றி சுத்தப்படுத்தும் பணியும் நடைபெறும்.

மின் விநியோக பிரிவை மாநகராட்சியிடம் இருந்து மின் வாரியம் ஏற்றபோது, சொத்துகளும் ஒப்படைக்கப்பட்டன. இதற்காக மாநகராட்சிக்கு வாரியம் ரூ49 கோடி கொடுக்க வேண்டும் என கணக்கிடப்பட்டது. இதுகுறித்து அரசு நியமித்த குழு முடிவின்படி செயல்படுத்தப்படும். இவ்வாறு ஆணையாளர் கூறினார்.

 


Page 39 of 148