Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

குடிநீர் இணைப்பை வலியுறுத்திதுண்டு பிரசுரம் வினியோகம்

Print PDF

தினமலர்                05.12.2010

குடிநீர் இணைப்பை வலியுறுத்திதுண்டு பிரசுரம் வினியோகம்

கடலூர்:கடலூர் நகரில் குடிநீர் இணைப்பு பெற வலியுறுத்தி கமிஷனர் தலைமையில் ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.கடலூர் நகரில் 40 சதவீத வீடுகளில் மட்டுமே நகராட்சி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். 60 சதவீத வீடுகளில் குடிநீர் இணைப்பு பெறவில்லை.

இதற்கிடையே பாதாள சாக்கடை திட்டப் பணி முடிவடைந்த வீதிகளில் சாலைபோடும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது.அவ்வாறு சிமென்ட் சாலை போடப்பட்ட பகுதிகளில் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு சாலையை உடைத்து இணைப்பு கொடுக்க முடியாது. எனவே சாலைப்பணி துவங்குவதற்கு முன்பே குடிநீர் இணைப்பு இல்லாதவர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என நகராட்சி வலியுறுத்தி வருகிறது.இது பற்றிய விழிப்புணர்வை கடலூர் மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி கமிஷனர் குமார் தலைமையில் பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா உள்ளிட்ட ஊழியர்கள் மஞ்சக்குப்பம் 10வது வார்டில் வீடுவீடாக துண்டு பிரசுரம் வழங்கினர்.

 

நகராட்சி வரி கட்ட காலக்கெடு

Print PDF

தினமலர்              05.12.2010

நகராட்சி வரி கட்ட காலக்கெடு

மேலூர் : மேலூர் நகராட்சியில் வசூலிக்கப்படும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், கடை கட்டட வாடகைகள் ஆகியவற்றை டிசம்பர் மாத இறுதிக்குள் கட்ட வேண்டும். டிச., 2010 த்திற்குள் 100 சதவித வரி வசூல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் நகராட்சிகளின் மண்டல இயக்குனர் ஆகியோரின் வலியுறுத்தலின் பேரில் இவ்வரிகள் உடனடியாக வசூலிக்கப்பட உள்ளதாக, மேலூர் நகராட்சி கமிஷனர் அய்யனார் தெரிவித்தார்.

 

நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த ஆணையர் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 03.12.2010

நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த ஆணையர் வலியுறுத்தல்

மதுரை, டிச. 2: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பல்வேறு வரி இனங்களை உரிய காலத்துக்குள் செலுத்த சம்பந்தப்பட்டோர் முன்வரவேண்டும் என, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது:

மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் மூலம் வரவேண்டிய வருவாய் பல கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. நிலுவையாக உள்ள சொத்துவரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை வரிகளை உடனடியாக உரிய காலத்துக்குள் சம்பந்தப்பட்டோர் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக வரித் தண்டலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் தங்களுடைய வரிகளை உரிய காலத்துக்குள் செலுத்தி, மாநகராட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும், ஜப்தி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புத் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படியும்,பொதுமக்கள், கடை உரிமையாளர்களை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Page 43 of 148