Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரும் 15ம் தேதி வரை கெடு வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்                 02.12.2010

வரும் 15ம் தேதி வரை கெடு வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

பொள்ளாச்சி, டிச 2: பொள் ளாச்சி நகராட்சிக்கு செ லுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், காலியிட வரி, சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவற்றை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையா ளர் எச்சரிக்கை விடுத்துள் ளார்.

பொள்ளாச்சி நகரில் உள்ள 36 வார்டுகளில் 12 ஆயிரத்து 879 வீட்டு குடிநீர் இணைப்பு உள்ளது. இவற்றிற்கு மூன்று மாத கட்டணமாக ரூ. 46 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. வீடுகள் உள்ளிட்ட 22 ஆயிரத்து 131 வரிவிதிப்பு இனங்கள் மூலம் 6 மாதங்களுக்கு ரூ. 3 கோடியே 14 லட்சம் வரியாக வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 336 வரிவிதிப்பு இனங்கள், ஆடிட்டர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட 767 இதர இனங்கள் மூலமாக 6 மாதத்திற்கு ரூ. 17 லட்சத்து 80 ஆயிரமாக வரி வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரண் டாம் பாதி நிதியாண்டு துவங்கி இரண்டு மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் பலரும் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். ஆகவே வருகிற 15ம் தேதிக் குள் நிலுவை வரிகளை செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளும்படி நகராட்சி ஆணை யாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் கூறியதாவது:

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, நகராட்சி குத்தகை கடைகளுக்கான வாடகை, லைசென்ஸ் கட்டணம் ஆகியவற்றை வருகிற 15ம் தேதிக்குள் நகராட்சியின் கனிணி மையங்களில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

15ம் தேதிக்குள் வரி செலுத்தாமல் இருப்பின் குடிநீர் கட்டணத்திற்காக குடிநீர் இணைப்பு எவ்வித அறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும். குத்தகை தொகை செலுத்தாதவர்களின் கடைகள் பூட்டி சீல் வைத்தல் மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காலி யிடங்களுக்கான வரி செலுத்தாதவர்களின் காலியிடங்களை நகராட்சி கட்டுப்பாட்டில் கையகப்படுத்த நடவடிக்கை எடு க்கப் படும். சொத்து வரி தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருப்பவர்கள் நகராட்சியின் வருவாய் பிரிவில் வழக்கு தொடர்பான விபரங்களை தெரிவித்து வழக்குக்கு முந்தைய வரியினை உடனே செலுத்த வேண் டும்.

வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆளாவதை தவிர்த்து நிலுவை வரிகளை செலுத்தி நகராட்சிக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு ‘கட்’ காசிபாளையம் நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன்          01.12.2010

வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு கட்காசிபாளையம் நகராட்சி எச்சரிக்கை

ஈரோடு, டிச.1: சொத்துவரி, தொழில்வரி கட்டத் தவறினால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சொத்துக்களுக்கான வரிகள் ஆண்டுதோறும் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை தவணைகளாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இம்மாதம் வரி செலுத்த கடைசி ஆகும்.

இதனையடுத்து, காசிபாளையம் மூன்றாம் நிலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் ஆகியவற்றை இம்மாதம் 15ம் தேதிக்குள் காசிபாளையம் நகராட்சி வசூல் மையங்களில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் மையம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வரிகள் செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று காசிபாளையம் நகராட்சி செயல் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

வரி செலுத்த வால்பாறை நகராட்சி நிர்வாகம் "கெடு'

Print PDF

தினமலர்        30.11.2010

வரி செலுத்த வால்பாறை நகராட்சி நிர்வாகம் "கெடு'

வால்பாறை: வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை வரும் 10ம் தேதிக்குள் செலுத்த நகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளது. வால்பாறை நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடைவாடகை, தொழில்வரி, உரிமைக்கட்டணம் ஆகியவற்றை வரும் 10ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதியில் வரி செலுத்தாதவர்கள் வீடு மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


Page 45 of 148