Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சொத்துவரி செலுத்தாதவர் மீது சட்டப்படி நடவடிக்கை

Print PDF

தினகரன்             30.11.2010

சொத்துவரி செலுத்தாதவர் மீது சட்டப்படி நடவடிக்கை

ராசிபுரம், நவ.30: ராசிபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து£ரி செலுத்த தவறியவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட ராசிபுரம் நகரில் உள்ள மக்கள் அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் செலுத்தி அதற்குரிய ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், வரி செலுத்துவோர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் கட்டலாம்.மேலும், அவ்வாறு மேற்குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்தாவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கச்செய்வதோடு மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, ராசிபுரம் நகருக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.

 

வரிகளை உடனடியாக செலுத்த நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினகரன்           30.11.2010

வரிகளை உடனடியாக செலுத்த நகராட்சி வேண்டுகோள்

நாமக்கல், நவ.30: நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்கட்டணம், கடைவாடகை, பாதாளசாக்கடை வைப்புத்தொகை மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் அல்லது நகராட்சி வரிவசூல் மையங்களில் உடனடியாக செலுத்தவேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை போன்ற சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் வசதிக்காக நகராட்சி வரிவசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் செயல்படும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

நகராட்சிக்கு வரியினங்களை டிச. 15.,க்குள் செலுத்த "கெடு'

Print PDF

தினமலர்                     26.11.2010

நகராட்சிக்கு வரியினங்களை டிச. 15.,க்குள் செலுத்த "கெடு'

உடுமலை: நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை டிச., 15 க்குள் செலுத்திட நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடுமலை நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் அறிக்கை: உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில்வரி, நகராட்சி கடை வாடகைகள், லைசென்ஸ் கட்டணங்கள் ஆகிய வரியினங்களை டிச., 15க்குள் நகராட்சி கணிணி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுகொள்ள வேண்டும். அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் வசூல் மையம் செயல்படும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்பும் வரியினங்களை செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் பூட்டி சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்து கொள்ளப்படும். சொத்து வரி செலுத்தாத வீடுகளை பூட்டி சீல் வைத்தல் மற்றும் ஜப்தி நடவடிக்கையும், காலியிடங்கள் நகராட்சி கட்டுப்பாட்டில் கையகப்படுத்தப்படும். சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்க நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்', என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 46 of 148