Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்தாவிடில் ஜப்தி உடுமலை நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன்             26.11.2010

வரி செலுத்தாவிடில் ஜப்தி உடுமலை நகராட்சி எச்சரிக்கை

உடுமலை, நவ.26: உடுமலை நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கை:

உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில்வரி, நகராட்சி கடைவாடகை கட்டணங்கள் ஆகிய வரியினங்களை டிசம்பர் 15ம் தேதிக்குள் உடுமலை நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டுகிறோம்.

பொதுமக்கள் வசதிக்காக அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் வசூல் மையம் செயல்படும். அதற்கு பின்னும் வரியினங்களை செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் பூட்டி சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், சொத்து வரி செலுத்தாத வீடுகளை பூட்டி சீல் வைத்தல், ஜப்தி செய்தல், வரி செலுத்தாத காலியிடங்களை நகராட்சி வசம் கையகப்படுத்தி சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

அடுத்த ஆண்டு முதல் வாகன வரி வசூலிக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன்           25.11.2010

அடுத்த ஆண்டு முதல் வாகன வரி வசூலிக்க மாநகராட்சி திட்டம்

பெங்களூர், நவ.25: பெங்களூர் மாநகராட்சி சார்பில் அடுத்த ஆண்டு முதல் வாகனவரி வசூலிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. பெங்களூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திட்டக் குழு தலைவர் ரவீந்திரா கூறுகையில், மாநகராட்சியில் வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை ஏற்படு கின்றன. இதனை தவிர்க்க, வாகனங்களின் எண்ணிக் கையை குறைக்கவும், வாக னங்களுக்கு வரிவசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி அனுமதி பெறப்படும். பெங்களூர் மையங்களில் வாகனவரி வசூலி க்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களின் விவ ரங்கள் குறித்து போக்குவ ரத்து துறை அதி காரிகளிடம் கேட்டுபெறப்படும். சொத் துவரியை போன்று வாக னங்களுக்கும் ஆண்டு வரி விதிக்கப்படும் என்றார்.

 

பெரம்பலூர் நகராட்சியில் ரூ1.10 கோடி வரி நிலுவை உரிய காலத்தில் செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினகரன்                  23.11.2010

பெரம்பலூர் நகராட்சியில் ரூ1.10 கோடி வரி நிலுவை உரிய காலத்தில் செலுத்த வேண்டுகோள்

பெரம்பலூர், நவ. 23: பெரம்பலூர் நகராட்சியில் ரூ1.10 கோடி வரி நிலுவையில் உள்ளது. உரிய காலத்தில் வரி நிலுவையை செலுத்த வேண்டுமென கலெக்டர் விஜயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர் நகராட்சி யில் தீவிர வரிவசூல் முகாம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று துவங்கியது. வடக்குமாதவி உழவர்சந்தையில் நகராட்சி ஆணை யர் சுரேந்திர ஷா வரவேற் றார். பெரம்பலூர் நகராட்சி வடக்குமாதவி ரோடு உழவர்சந்தையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 4வது, 6வது வார்டுக்கான வரி மற்றும் வரியில்லா இனங் கள் வசூல் சிறப்பு முகாமை கலெக்டர் விஜயக்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி மற்றும் வரி யில்லா இனங்கள் வசூல் மற்றும் மக்களின் குறை களை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த முகாம்கள் 22ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளன. முகாம்கள் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 17 இடங்களில் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகை, கடை வாடகை போன்ற பல்வேறு வரிகளை செலுத்த வேண்டும். ஆனால் தற் போது நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய ரூ1 கோடியே 10 லட்சம் வரி நிலுவையாக உள்ளது. பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறியுள்ள பெரம் பலூர் மேலும் வளர்ச்சி யடைய வேண்டுமென் றால், பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகைகளை முழுமையாக செலுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் நகராட்சி பகுதிகளில் பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரம்பலூர் நகராட்சியில் 3,500 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ31லட்சம் வரியாக கிடைக்கிறது. மேலும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் 2,200 பொதுகுழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி க்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், பயனாளிகள் உரியகாலத்தில் செலுத்தினால் தான் மக்களுக்கான சேவைகளை தடையின்றி நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்த முடியும் என்பதை அனை வரும் உணரவேண்டும் என்றார்.

முகாமில் துப்புரவு பணி மேற்கொள்ளுதல், கட்டிட அனுமதிக்கான விண்ணப்பங்கள், குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள், சொத்துவரி விதிப்பிற்கான விண்ணப்பங்கள், காலி மனை வரிவிதிப்பிற்கான விண்ணப்பங்கள் நேரடியாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. நகராட்சித்தலைவர் இளையராஜா, துணைத்தலைவர் முகுந்தன், வார்டு கவுன்சிலர்கள் அப்துல்பாருக், மாரிக்கண்ணன், ஈஸ்வரி, புவனேஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 47 of 148