Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரிகளை நிலுவை இன்றி வசூலிக்க வேண்டும்

Print PDF

தினமணி            21.11.2010

வரிகளை நிலுவை இன்றி வசூலிக்க வேண்டும்

சேலம், நவ. 20: சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர் வரி தொகையை நிலுவை இல்லாமல் வசூலிக்க வேண்டும் என்று வருவாய் பிரிவு ஊழியர்களுக்கு ஆணையர் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வரி வசூல் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய் பிரிவு அதிகாரிகள், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைகள், கடை வாடகைகள் பல மாதங்கள் நிலுவையில் இருப்பது குறித்து ஆணையரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய ஆணையர், மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள, சீரமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் விடுபடாமல் முழுமையாகக் கண்டறிந்து வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரிக்கான கேட்பு அட்டையை வரும் 1-ம் தேதி முதல் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

பொதுமக்களால் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, ஆண்டு உரிமை ஆணை இனங்கள், இதர இனங்களின் தொகைகளை நிலுவையின்றி முனைப்புடன் வசூலிக்க வேண்டும். பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து தங்கள் நிலுவைகளை செலுத்த வேண்டும் என்றும் தங்களது சொத்து வரி விவரத்தை ரூ. 10 செலுத்தி கேட்பு அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து மாநகர எல்லைக்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள, சீரமைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் வரி விதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இது குறித்து கட்டட உரிமையாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

பாதாள சாக்கடை இணைப்பு பெற கட்டண விவரம் அறிவிப்பு உரிய வைப்புத்தொகை உடனே செலுத்த அறிவுரை

Print PDF

தினகரன்             19.11.2010

பாதாள சாக்கடை இணைப்பு பெற கட்டண விவரம் அறிவிப்பு உரிய வைப்புத்தொகை உடனே செலுத்த அறிவுரை

நாகை, நவ. 19: நாகை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு பெற கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய வைப்புத்தொகையை செலுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ49.43 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட த்தை அமல்படுத்த அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. நாகை நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள வீடுகளில் சாக்கடைகள், கழிவுநீர் குழாய்கள், மல அறைகள் ஆகியவற்றை சுகாதாரத்திற்கு ஏற்ப மற்ற அமைப்புகளை பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் அமைக்கவும், குடியிருப்பு இணைப்புதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்ய நகர்மன்ற கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் குடியிருப்புதாரர் கள் ஒவ்வொரு குடியிருப் புக்கும் செலுத்த வேண்டிய டேவணித்தொகை மற்றும் மாதாந்திர கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளை பொறுத்தவரை 500 சதுர அடிக்கு குறைவாக இருந் தால் சேவை கட்டணமாக ரூ100, முன்வைப்புத் தொகையாக ரூ5,000 செலுத்த வேண் டும். 501 முதல் 1200 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ110முன்வைப்புத்தொகையாக ரூ7500, 1201 முதல் 2400 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ120,முன்வைப்புத்தொகையாக ரூ9,000, 2400 சதுர அடிக்கு மேல்இருந்தால் சேவை கட்டணமாக ரூ150, முன்வைப்புத்தொகையாக ரூ10,000 செலுத்தவேண்டும்.

வணிக உபயோக கட்டிடங்களை பொறுத்தவரை 500 சதுர அடிக்கு குறைவாக இருந்தால் சேவை கட்டணமாக ரூ.150ம், முன்வைப்புத்தொகையாக ரூ10,000, 501 முதல் 1200 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ200,

முன்வைப்புத்தொகையாக ரூ15,000, 1201 முதல் 2400 சதுர அடி வரை இருந்தால் சேவை கட்டணமாக ரூ400, முன்வைப்புத்தொகையாக ரூ25,000, 2400 சதுர அடிக்கு மேல் இருந்தால் சேவை கட்டணமாக ரூ10,000, முன்வைப்புத் தொகையாக ரூ1 லட்சம் செலுத்த வேண் டும். எனவே தங்களின் கட்டிட அளவுப்படி வைப்புத்தொகையை நாகை நகராட்சி அலுவலகம் மற்றும் நாகூர் வசூல் மையங்களில் செலுத்தி பாதாள சாக்கடை இணைப்பிற்கு முன்னுரிமை பெற்றுக்கொள்ளவும். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமையாக முடிய முழு ஒத்துழைப்பு வழங்கவும். இத்தகவலை நாகை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 

கோவை மாநகராட்சியில் விரைவில் அமல் வீடுகளில் குப்பைகளை பெற சொத்து வரிக்கு ஏற்ப கட்டணம்

Print PDF

தினகரன்                18.11.2010

கோவை மாநகராட்சியில் விரைவில் அமல் வீடுகளில் குப்பைகளை பெற சொத்து வரிக்கு ஏற்ப கட்டணம்

கோவை, நவ. 18: கோவை மாநகராட்சியில் தினமும் சேகரமாகும் 600 முதல் 650 மெட்ரிக் டன் குப்பைகள், வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக ரூ96.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட உள்ளது. மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வீடுகளில் இருந்து பெற 4.58 லட்சம் குப்பைக்கூடைகள் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணி, 9 வார்டுகளில் பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை 72 வார்டுகளில், முழு அளவில் செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்றுதல், தரம் பிரித்தல், வெள்ளலூரில் கழிவு கட்டமைப்பு ஏற்படுத்துதல், உரம் தயாரித்தல் போன்ற பணிகள் இனி தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இதற்கிடையே, குப்பைகளை வீடு, நிறுவனங்களிலிருந்து பெற கட்டணம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீடு, நிறுவனங்களின் சொத்து வரி அளவுக்கு ஏற்ப கட்டண விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி 6 மாதத்துக்கு ரூ500 வரை செலுத்தும் வீடுகளுக்கு மாதம் ரூ10, ரூ501 முதல் ரூ1000 வரை செலுத்தும் வீடுகளுக்கு ரூ20, இதற்கு மேல் வரி செலுத்தினால் ரூ30 கட்டணம், தினமும் 3 டன் அளவு குப்பை சேகரமாகும் வணிக நிறுவனம், கடை, வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு மாதம் ரூ500, இதற்கு அதிகமாக குப்பை சேர்ந்தால் ரூ1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தமிழகத்தில் இதுதான் முதன்முறை. விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ9 கோடி வருவாய் கிடைக்கும்.

இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "குப்பைகளை அகற்றுவதற்கு கட்டணம் விதிக்க, சட்ட வடிவு, விதிமுறை விவரங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கிய பின்னர், திட்டம் நடைமுறைக்கு வரும். வீடுகளில் குப்பை எடுக்க கட்டணம் விதிக்க மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது" என்றார்.

 


Page 48 of 148