Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சொத்துவரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன் 22.10.2010

சொத்துவரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

நெல்லை, அக். 22: நெல்லை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாத வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.

நெல்லை மாநகராட்சி யில் நெல்லை, பாளை, தச் சை, மேலப்பாளையம் என 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்துவரி மற்றும் குடிநீர் வரி மண்டல அலுவலகங்கள், சேவை மையம் மற்றும் வரிசூல் வாகனம் மூலமாக வரி வசூலிக்கப்படுகிறது.

மேலும் வரிகளை உடனடியாக செலுத்த பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அறிவிப்பு செய்துவருகிறது. ஆனால் இதையும் மீறி கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் பாளை மண்டலத்தில் திருச்செந்தூர் சாலை பகுதி, பஸ்ராவுத்தர் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சொத்துவரி செலுத்தாத 5 வீடுகளில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் ஊழியர்கள் கருணாகரன், அனந்தகிருஷ்ணன், வடிவேல் முருகன் ஆகியோர் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

இதுபோல் 3 ஆண்டுகளுக்கு மேலாக சொத்துவரி செலுத்தாதவர்கள் வீடுகளிலும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தொடரும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

பாளை பகுதியில் சொத்து வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

Last Updated on Friday, 22 October 2010 07:39
 

வரி கட்ட மாநகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர் 22.10.2010

வரி கட்ட மாநகராட்சி வேண்டுகோள்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் வரி கட்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் அறிக்கை: ஈரோடு மாநகராட்சிக்கு 2010-11ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், உரிம கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன், ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் தொகை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

Print PDF

தினமணி 21.10.2010

பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

சென்னை, அக். 20: ஊராட்சிகளில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கோவை அரசூரில் உள்ள மகாராஜா கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் கே. பரமசிவம் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பது:

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 172 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் (மதிப்பீடுகள் மற்றும் வரி வசூலிப்பு) விதிகள், 1999-ன் விதி 15 ஆகியவற்றின்படி ஊராட்சிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை, விதி 15-ல் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஊராட்சிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறது.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஓய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23-க்கு தள்ளிவைத்தனர்.

 


Page 51 of 148