Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரிகளை செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமலர் 21.10.2010

நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரிகளை செலுத்த வேண்டுகோள்

திருநெல்வேலி: நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரிகளை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சியின் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் வார்டு வாரியாக அனுப்பப்பட்டு வரிவசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய நடப்பு வரி மற்றும் நிலுவை வரிகளை நெல்லை மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பு

Print PDF

தினமலர் 21.10.2010

பள்ளி, கல்லூரி கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பு

சென்னை : கல்வி நிறுவனங்களின் கட்டடங்களுக்கு ஊராட்சிகள் சொத்து வரி விதிப்பது செல்லும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை, நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் அரசூரில் உள்ள மகாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் பரமசிவம் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மற்றும் விதிகளின்படி, எங்கள் கல்லூரி கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 2008ம் ஆண்டு புதிய விதி கொண்டு வரப்பட்டது. அதன்படி, எங்கள் கல்லூரி கட்டடம் மற்றும் நிலங்களுக்கு சொத்து வரி செலுத்த வேண்டும் என முத்துகவுண்டன்புதூர் கிராம ஊராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஊராட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும்.ஏற்கனவே, ஒரு அப்பீல் மனுவை விசாரித்த மதுரை கிளையின், "டிவிஷன் பெஞ்ச்' (நீதிபதிகள் முகோபாதயா, வேணுகோபால் அடங்கிய பெஞ்ச்) எந்த காரணமும் குறிப்பிடாமல், முழு பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பியது. அவ்வாறு முழு பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பியது, சட்டத்துக்கு முரணானது. ஏனென்றால், ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை வழக்கில், இதே பிரச்னை குறித்து, "டிவிஷன் பெஞ்ச்' தீர்ப்பளித்துள்ளது.

அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், ஜெயபால் அடங்கிய முழு பெஞ்ச், "ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை வழக்கில், விதிகளில் கூறப்பட்டுள்ளபடி அல்லாமல், விதிவிலக்கு அளிக்க முடியாது என்ற சட்டப்பிரிவை (பிரிவு 176) "டிவிஷன் பெஞ்ச்' கவனிக்க தவறி விட்டது' என கூறியுள்ளது. முழு பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தவறானது.ஊராட்சிகளில் உள்ள கட்டடங்களுக்கு சொத்து வரி விதிப்பில் இருந்து விதிவிலக்கு அளிக்க மறுக்கின்றனர். ஆனால், நகராட்சிகள், மாநகராட்சிகளின் கீழ் வரும் கட்டடங்களுக்கு விதிவிலக்கு உள்ளது. இது பாரபட்சமானது. நகர்ப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு பல நன்மைகள் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இல்லை.

கிராமப்புறங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கல்வி போதிக்கிறது. அவ்வாறு செயல்படும் கல்வி நிறுவனங்களை தண்டிக்கக் கூடாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரி விதிக்க வகை செய்யும் புதிய விதியை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அப்பீல் மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் கங்குலி, வக்கீல் கந்தவடிவேல் துரைசாமி ஆஜராகினர். மனு மீதான விசாரணையை நவ., 23ம் தேதிக்கு, "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.

 

பெங்களூரில் இயங்கி வரும் அனைத்து கடைகளும் வரி பட்டியலில் சேர்ப்பு மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 20.10.2010

பெங்களூரில் இயங்கி வரும் அனைத்து கடைகளும் வரி பட்டியலில் சேர்ப்பு மாநகராட்சி முடிவு

பெங்களூர், அக். 20: பெங்களூர் மாநகராட்சியில் இய ங்கி வரும் சிறிய கடைமுதல் பெரிய வர்த்தக நிலையங்கள் வரை அனைத்தும் மாநகராட்சியின் வரி திட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் வரி சான்றிதழ் வழங்கும் முகாமை ஒரு மாதம் நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூர் மாநகரில் எல்லை தற்போது 810 சதுர கிலோ மீட்டர் பரந்துள்ளது. மொத்தம் உள்ள 198 வார்டுகளில் குறைந்த பட்சம் 10 லட்சத்திற்கும் அதிக மான கடை, ஒட்டல், வர்த் தக மையம், சிறு தொழிற்சாலை, தொழிற்சாலை உள்பட மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் இயங்கி வருகிறது. ஆனால் மாநகராட்சியின் அனுமதி பெற்று வரி செலுத்தும் நிலையங்க ளில் எண்ணிக்கை 40 ஆயி ரம் மட்டுமே உள்ளது. இது 10 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இதை கருத்தில் கொண்டுள்ள மாநகராட்சி ஆணையர், மாநகரில் சந்து& பொந்துகளில் இயங்கி வரும் பெட்டி கடை முதல் பெரிய வர்த்தக நிலையங்கள் வரை அனைத்தும் மாநகராட்சியின் வரி செலுத்தும் பட்டியலின் கீழ் கொண்டுவர தீர்மானித்துள்ளார்.

இதற்காக வரி சான்றிதழ் வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்துள்ளார். மாநகரில் தற்போது இயங்கி வரும் 8 மண்டலங்களில் பணியாற்றும் இணை மற்றும் துணை ஆணையர்கள், சுகாதார அதிகாரிகள், வரி வசூல் ஆணையர்கள், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று சாலை, தெரு வீதி உள்பட ஆங்காங்கே இயங்கி வரும் கடைகளுக்கு அதன் தகுதிக்கு ஏற்ப வரி வசூல் செய்வதுடன், மாநகராட்சி சார்பில் கடை நடத்துவதற்காக சான்றிதழை அந்த இடத்தில் வழங்கவும் முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் மாநகரில் இயங்கி வரும் அனைத்து வர்த்தகம், தொழில் நிலையங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்து விடும். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது ஆணையர் சித்தையாவின் கருத்தாகவுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் துண்டு அறிக்கை, ஒலிபெருக்கி, பிளக்ஸ் போர்டு ஆகியவற்றின் மூலம் விளம்பரம் படுத்த முடிவு செய்யப்பட்டு ள்ளது. சுமார் 1 மாதம் இதற்கான முகாமை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அனேகமாக ராஜோற்சவ தினமான நவம்பர் 1ம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநகராட்சி வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

 


Page 52 of 148