Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்தாதவர் விபர பட்டியல்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

Print PDF

தினமலர் 19.10.2010

வரி செலுத்தாதவர் விபர பட்டியல்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியல் முகவரியுடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:நெல்லை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தண்ணீர் கட்டணம், தொழில் வரி, பாதாளசாக்கடை சேவைக்கட்டணம் மற்றும் கடை வாடகைகளை பொதுமக்கள் செலுத்த நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர், பாளை, நெல்லை, மேலப்பாளையம் மண்டலத்திலுள்ள சேவை மையம் மற்றும் அலகு அலுவலகங்களில் வசூலிக்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சியில் தற்போது தீவிர வரி வசூல் முகாம் நடந்து வருகிறது. இதுதவிர நடமாடும் வரிவசூல் வாகனம் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று மக்களிடம் வரிகளை பெற்று வருகின்றது. இன்னும் ஒரு சிலர் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தாமல் மாநகராட்சிக்கு நிலுவை வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.எனவே மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள நபர்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட்கள் மற்றும் இதர பொது இடங்களிலும் வைக்கப்படவுள்ளது. இதுதவிர இந்த பட்டியல் வெப்சைட்டிலும் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே வரி மற்றும் குத்தகை இனங்களை செலுத்தாதவர்கள் மாநகராட்சி வரி வசூல் மையங்களில் வரி பாக்கியை செலுத்தி பட்டியலில் இடம் பெறுவதை தவிர்க்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல்லடத்தில் குடிநீருக்காக ரூ. 2.15 கோடி வசூல்

Print PDF

தினமணி 19.10.2010

பல்லடத்தில் குடிநீருக்காக ரூ. 2.15 கோடி வசூல்

பல்லடம், அக். 18: பல்லடம் நகராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க ரூ. 2.15கோடி வைப்புத் தொகையாக வசூலாகியுள்ளது.

÷பல்லடம் நகராட்சிப் பகுதியில் விண்ணப்பம் அளிப்பவர்கள் அனைவருக்கும் அத்திக்கடவு குடிநீர்த் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் க்குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. குடிநீர் இணைப்பு கேட்டு 3 ஆயிரம் பேர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.15 கோடி வசூலாகியுள்ளது. குடிநீர்க் குழாய்களை மக்களே பிளம்பர்களை வைத்து பொருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

விழுப்புரம் நகராட்சியில் ரூ5.50கோடிவரிபாக்கி வார்டு வாரியாக சிறப்பு முகாமுக்கு கோரிக்கை

Print PDF

தினகரன் 19.10.2010

விழுப்புரம் நகராட்சியில் ரூ5.50கோடிவரிபாக்கி வார்டு வாரியாக சிறப்பு முகாமுக்கு கோரிக்கை

விழுப்புரம், அக். 19: விழுப்புரம் நகராட்சியில் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ரூ5.50 கோடி நிலுவையில் உள்ளது.

தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பின் தங்கிய மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் நகராட்சியில் வீட்டுவரி உயர்த்தப்படவில்லை. வரியை உயர்த்தாமல் ரூ35 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ10 கோடியில் குடிநீர் திட்டம், ரூ.ஒரு கோடியில் நவீன எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

மின் விளக்குகள், ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்படுகிறது. மேலும் வீடுகளுக்கு நேரிடையாக சென்று குப்பைகள் பெறப்படுகிறது. இதுதவிர பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக ரூ7 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. விழுப்புரம் நகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் மேலும் விரிவுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. அவர்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.

விழுப்புரம் நகராட்சியில் உள்ள சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூலம் ரூ4 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 116 வசூல் செய்ய வேண்டியுள்ளது. இதேபோல் 6274 குடிநீர் இணைப்புகள் மூலம் ரூ83 லட்சத்து 87 ஆயிரத்து 599 வசூல் செய்ய வேண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.5 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 715 நிலுவையில் உள்ளது. வரி செலுத்துவதில் நடுத்தர மக்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

வரிபாக்கியை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும். தீவிர வரி வசூல் வாரம் நடத்த வேண்டும். ஒவ்வொரு வார்டாக சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வரி வசூலித்து அங்கேயே கணினி ரசீது வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கு செல்லும் வகையில் முன் அறிவிப்பை முறையாக செய்ய வேண்டும். இதன்மூலம் நிலுவையில் உள்ள வரியில் சுமார் 20 சதவீத தொகை வசூலிக்க வாய்ப்புள்ளதாக வரி செலுத்துவோர் கூறுகின்றனர்.

வரி வசூலிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகத்தோடு அந்தந்த வார்டு கவுன்சிலர்களும் இணைந்து செயல்பட்டால் முழுபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் வரி செலுத்துவோரிடம் உள்ளது.

 


Page 53 of 148