Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நகராட்சி கமிஷனர் காலிப்பணியிடத்தால் பாதிப்பு : சாத்தூரில் வரி வசூல், வளர்ச்சிப் பணிகள் மந்தம்

Print PDF

தினமலர் 19.10.2010

நகராட்சி கமிஷனர் காலிப்பணியிடத்தால் பாதிப்பு : சாத்தூரில் வரி வசூல், வளர்ச்சிப் பணிகள் மந்தம்

சாத்தூர் : சாத்தூர் நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் நகராட்சி கமிஷனர் காளிமுத்துபணி நிறைவு பெற்று சென்று விட்ட நிலையில் இப்பணியிடத்திற்கு விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஜான்சனிடம் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதத்திற்கும் மேலாக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் விருதுநகர் கமிஷனர், சாத்தூர் வந்து செல்லும் நாட்கள் குறைவாக இருப்பதால் இவரது கையெழுத்துக்காக பல பைல்கள் சாத்தூரில் காத்துக் கிடக்கின்றன. ஏற்கனவே சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் விருதுநகர் சென்று ஓவ்வொறு முறையும் கையெழுத்து வாங்க பிறப்பு சான்று வாங்க வருபவர்களும், புதிய தொழில்கள் தொடங்க விண்ணப்பித்தவர்களும், புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி கோரி வருவோரும் பல நாட்கள் காத்து கிடக்கின்றனர். விவரமான சிலரோ நகராட்சி ஊழியர்களை "கவனித்து' தங்கள் வேலையை முடித்து விடுகின்றனர்.

விபரம் இல்லாத பலர் தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு காவடி எடுக்கின்றனர். வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. சாத்தூரில் பல கட்டடங்கள் முறையான அனுமதியின்றியே கட்டப்படுகின்றன. கட்டடங்கள் அதிகரித்து வந்த போதிலும் நகராட்சியின் நிதி நிலை, வருவாய் குறைவாகவே உள்ளது. முறையான அனுமதியில்லாத பாதாள சாக்கடை இணைப்புகள் பெருகி வருவதால் பல இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகையில் குடிநீரில் சாக்கடை கலக்கிறது. மேலும் நகரில் வரிவசூல் செய்யும் வேலையும் சரிவர நடைபெறவில்லை, இதனால் நகராட்சிக்கு வர வேண்டிய வருமானம் 65 சதவீத நிலையிலேயே உள்ளது.

நகராட்சியின் பொது நிதி நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் இதனால் சாதாரணமான பைப் லைன் உடைப்பை கூட ரிப்பேர் செய்யவும், பியூஸ் போன தெரு விளக்குகளுக்கு புது டியூப் லைட் வாங்கவும் நகராட்சியில் நிதி யில்லாமல் மிகவும் தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக நகராட்சியினர் தெரிவித்தனர். சாத்தூர் நகராட்சியில் தினம்தோறும் தண்ணீர் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் குடிநீர் கட்டணத்தை கூட நகராட்சி பில் கலெக்டர்களால் 100 சதவீதம் வசூலிக்க முடியவில்லை. இதற்கு காரணம் கமிஷனரின் நேரடி பார்வை இல்லாததது தான். எனவே சாத்தூருக்கு தனி கமிஷனர் நியமிக்க வேண்டும்.

 

வரி பாக்கி: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Print PDF

தினமணி    18.10.2010

வரி பாக்கி: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருநெல்வேலி,அக்.17:திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என அம் மாநகராட்சியின் ஆணையர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி,காலிமனை வரி, தண்ணீர் கட்டணம்,தொழில் வரி,பாதாள சாக்கடை, சேவைக் கட்டணம்,கடை வாடகைகள் ஆகியவற்றை பொதுமக்கள் திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகம், தச்சநல்லூர்,பாளையங்கோட்டை,திருநெல்வேலி,மேலப்பாளையம் ஆகிய மண்டல அலுவலங்களில் உள்ள சேவை மையங்கள், அலகு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் செலுத்தி வருகின்றனர்.

தீவிர வரிவசூல் முகாம் மூலமும் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வரி செலுத்துமாறு மக்களிடம் பல்வேறு அறிவிப்புகளும்,விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. நடமாடும் வரி வசூல் வாகனம் மூலம் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே சென்று வரி வசூலிக்கப்படுகிறது.

இருப்பினும் சிலர் வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதன் காரணமாக பணிகளில் இடர்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் தொடர்ந்து நிலுவை வைத்துள்ளவர்களின் பெயர்,முகவரி பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இந்தப் பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்படும். இதேபோல இணையத்தளத்திலும் இப் பட்டியல் வெளியிடப்படும்.

இந் பட்டியலில் பெயர் இடம் பெறாமல் இருப்பதற்கு, வரி செலுத்தாமல் இருப்பவர்கள் இனியும் காலதாமதம் செய்யாமல் நிலுவை வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றார் சுப்பையன்.

 

குடிநீர்க் கட்டணத்தை நாளைக்குள் செலுத்த வேண்டும்: ஆணையர்

Print PDF

தினமணி 14.10.2010

குடிநீர்க் கட்டணத்தை நாளைக்குள் செலுத்த வேண்டும்: ஆணையர்

திருச்சி, அக். 13: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணங்களைச் செலுத்த வெள்ளிக்கிழமை (அக். 15) கடைசி நாள் என ஆணையர் த.தி. பால்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிநீர்க் கட்டண நிலுவை மற்றும் நடப்பு கேட்பு விவரங்கள் ஏற்கெனவே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலமோ, மாநகராட்சி வரிவசூல் மையங்களிலோ செலுத்த வேண்டிய கட்டணத்தை அறிந்து கொள்ளலாம். கட்டணம் செலுத்த வெள்ளிக்கிழமை கடைசி நாள். தவறும்பட்சததில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட பொறியர் பிரிவு, வருவாய்ப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் சட்டப்படி குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வர் என எச்சரிக்கப்படுகிறது.

 


Page 54 of 148