Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

குடிநீர் கட்டண பாக்கி மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள ரூ3,065 கோடி வருவாய்

Print PDF

தினகரன் 07.10.2010

குடிநீர் கட்டண பாக்கி மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ள ரூ3,065 கோடி வருவாய்

மும்பை, அக். 7: மும்பை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோக செலவு மற்றும் கட்டண பாக்கியாக ரூ3065 கோடி தொகை நிலுவையில் உள்ளது.

மும்பைக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் மாநகராட்சியின் குடிநீர் விநியோக பிரிவு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. வருவாயை விட செலவு அதிகரித்து கொண்டே போவதால் இந்த துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந்து கொண்டே போகிறது.

இந்த துறைக்கு மொத்தம் ரூ3.065 கோடி வருவாய் வராமல் நிலுவையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குடிநீர் விநியோக துறை தொடங்கப்பட்டது முதல் வர வேண்டிய வருவாய் நிலுவையில் உள்ள தொகை கணிசமாக சேர்ந்து இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மாநகராட்சிக்கு ரூ200 கோடி வருவாய் வர வேண்டியுள்ளது என்று டேட்டா தெரிவிக்கிறது.

குடிநீர் விநியோகம் தொடர்பான கட்டண பிரச்னைகளால் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், வரி வசூலாகாமல் இருப்பது போன்றவைகளால் இந்த வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்கு மாநகராட்சி குறைந்த கட்டணம் வசூலிக்கிறது. அதே சமயம் மானியமும் வழங்குகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் கட்டணம் அதிகமாகும். ஆனால் சலுகைகள் கொடுத்தாலும் குடிநீர் கட்டணத்தில் குடிசைப்பகுதிகளீல் 58 சதவீதமும் குடியிருப்பு கட்டிடங்களிடம் இருந்து 85 சதவீதமும் வருவாய் கிடைக்கிறது.

வருவாய் முழுமையாக கிடைப்பதில்லை. முதலீடு மற்றும் லாப சுழற்சியில் கடும் வித்தியாசம் நிலவுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் வருவாய்க்கு ஏற்ற செலவு இல்லை. செலவு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். இது பற்றி மாநகராட்சியின் குடிநீர் வினியோக துறை முதன்மை பொறியாளர் வினய் தேஷ்பாண்டே மறுத்து விட்டார்.

 

குடிநீர்க் கட்டணங்களைச் செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 06.10.2010

குடிநீர்க் கட்டணங்களைச் செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

திருச்சி,​​ அக்.​ 5:​ திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டண கேட்பு தொகைகளை அக்.​ 15-ம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் த.தி.​ பால்சாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

​ ​ இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

​ ​ திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்புக் கட்டடங்கள்,​​ வணிக உபயோகக் கட்டடங்கள் மற்றும் தொழில்சாலைக் கட்டடங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு,​​ தனித்தனி விகிதங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

​ ​ வீட்டு உபயோக இணைப்புக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும்,​​ வீட்டு உபயோகமல்லாத இணைப்புகளுக்கு மாதந்தோறும் கேட்பு எழுப்பப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.​ நிலுவை மற்றும் நடப்பு கேட்பு குறித்த விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

​ ​ இணையதளம் மூலமாகவோ அல்லது கணினி வரி வசூல் மையங்களிலோ இந்த நிலுவை மற்றும் நடப்பு கேட்பு விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.​ குடிநீர்க் கட்டணத்தை மாநகராட்சி மைய அலுவலகம்,​​ கோட்ட அலுவலகங்கள்,​​ சேவை மையங்கள் மற்றும் நடமாடும் கணினி வரி வசூல் மையம் ஆகிய இடங்களில் நிலுவையின்றிச் செலுத்தலாம்.

​ ​ தவறும்பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொறியர் பிரிவு மற்றும் வருவாய்ப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் மூலம் சட்டப்படி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை 4 ஆயிரம்: மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 01.10.2010

பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை 4 ஆயிரம்: மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

கோவை;கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கு சேவை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு 4 ஆயிரம் ரூபாயும், நட்சத்திர ஓட்டல்களுக்கு 26 ஆயிரம் ரூபாயும் வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 377.13 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. ஒவ்வொரு இணைப்புக்கும் சேவை கட்டணமும், வைப்பு நிதியும் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் படி நிறைவேற்றப்பட்டுள்ள சேவை கட்டணம் வருமாறு:

வீட்டு இணைப்பு ஒன்றிற்கு நான்காயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். (வைப்புத்தொகை 3 ஆயிரம், மேற்பார்வை கட்டணம் ஆயிரம் ரூபாய் சேர்த்து கட்டவேண்டும்), இணைப்பு ஒன்றிற்கு வைப்புத்தொகையாக 3 ஆயிரம் ரூபாய் அல்லது பாதாள சாக்கடை இணைப்பு பெற வேண்டிய கட்டடம் முழுமைக்குமான அரையாண்டு சொத்துவரித்தொகை, இதில் எது அதிகமோ அந்த தொகை செலுத்தப்பட வேண்டும், இத்துடன் மேற்பார்வை கட்டணம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.வீட்டு உபயோகம் அல்லாத தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிறு ஓட்டல்கள் மருத்துவமனைகளுக்கு 21 ஆயிரம் ரூபாயும், நட்சத்திர ஓட்டல்களுக்கு 26 ஆயிரம் ரூபாயும் வைப்பு நிதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர சேவை கட்டணம்: வீடு களுக்கு: 500 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பிற்கும் மாதந்தோறும் சேவைக்கட்டணமாக 30 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

500 சதுர அடிக்கு மேல் ஆயிரத்து 200 சதுர அடி வரை ரூ.50ம், ஆயிரத்து 200 சதுர அடிக்கு மேல் 2 ஆயிரத்து 400 சதுர அடி வரை ரூ.75ம், 2 ஆயிரத்து 400 சதுர அடிக்கு மேல் 4 ஆயிரம் சதுர அடி வரை 150 ரூபாயும், 4 ஆயிரம் சதுர அடிக்கு மேல் 200 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக வளாகங்கள்: 500 சதுர அடிக்கு குறைவான கட்டடத்திற்கு ரூ.75 ம், 500 சதுரஅடியிலிருந்து ஆயிரத்து 200 சதுர அடி வரை 150ம், ஆயிரத்து 200 சதுர அடியிலிருந்து 2 ஆயிரத்து 400 சதுர அடி வரை 200 ரூபாயும், 2 ஆயிரத்து 400 சதுர அடியிலிருந்து 7 ஆயிரத்து 500 சதுர அடிவரை உள்ள கட்டடத்திற்கு 350 ரூபாயும், 7 ஆயிரத்து 500 சதுர அடியிலிருந்து 10 ஆயிரம் சதுர அடி வரை 700 ரூபாயும், 10 ஆயிரம் சதுர அடியிலிருந்து 25 ஆயிரம் சதுர அடி வரை ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் சதுர அடியிலிருந்து ஒவ்வொரு 5 ஆயிரம் சதுர அடிக்கும் ஆயிரத்து 100 ரூபாயும் கட்டணமாக பெறப்படும்.

தொழிற்சாலைகள்: 500 சதுர அடிக்கும் குறைவானவைக்கு 75 ரூபாயும், 500 சதுர அடியிலிருந்து ஆயிரத்து 200 சதுர அடி வரை 150 ரூபாயும், ஆயிரத்து 200 சதுர அடியிலிருந்து 2 ஆயிரத்து 400 சதுர அடி வரை 200 ரூபாயும், 2 ஆயிரத்து 400 சதுர அடியிலிருந்து 5 ஆயிரம் சதுர அடி வரை 350 ரூபாயும், 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் 500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். மருத்துவமனைகள்: 10 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு 500 ரூபாயும், 11 முதல் 25 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கு 750 ரூபாயும், 25 முதல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு ஆயிரம் ரூபாயும், 100 முதல் 250 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், 250 படுக்கைகளுக்கு மேல் உள்ள படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு 5 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக் கப்படும். தங்கும் விடுதிகள்: 10 படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதிக்கு ரூ. 500ம், 11 முதல் 25 படுக்கை கொண்ட தங்கும் விடுதிக்கு ஆயிரம் ரூபாயும், 25 க்கும் மேல் படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதிக்கு ஆயிரத்து 500 ம், 3 நட்சத்திர அந்தஸ்து அல்லது அதற்கு மேல் வசதி கொண்ட தங்கும் விடுதிக்கு 2 ஆயிரத்து 500ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கும் இடங்கள்: 500 சதுர அடிக்கு குறைவானவற்றிற்கு 60 ரூபாயும், 500 சதுர அடியிலிருந்து ஆயிரத்து 200 சதுர அடி வரை 100 ரூபாயும், ஆயிரத்து 200 சதுர அடியிலிருந்து 2 ஆயிரத்து 400 சதுர அடி வரை 150 ரூபாயும், 2 ஆயிரத்து 400 சதுர அடியிலிருந்து 4 ஆயிரம் சதுர அடி வரை 300 ரூபாயும், 4 ஆயிரம் சதுர அடிக்கு மேல் 400 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப் படும்.

உணவகங்கள் மற்றும் விடுதிகள்: 300 சதுர அடி வரை உள்ள சிறிய உணவு விடுதிகளுக்கு 100 ரூபாயும், 300 சதுர அடியிலிருந்து 750 சதுர அடி வரை உள்ள நடுத்தர உணவு விடுதிகளுக்கு 200 ரூபாயும், 750 சதுர அடியிலிருந்து ஆயிரத்து 500 சதுர அடி வரை உள்ள விடுதிகளுக்கு ஆயிரம் ரூபாயும், ஆயிரத்து 500 அடியிலிருந்து 2 ஆயிரத்து 500 அடி வரை உள்ள விடுதிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயும், 3 நட்சத்திர அந்தஸ்த்திற்கு மேற்பட்ட ஓட்டல்கள் மற்றும் அதற்கு நிகரான உணவகங்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், 5 நட்சத்திர அந்தஸ்து உள்ள உணவகங்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்கள் : ஆயிரம் இருக்கைகளை கொண்டவற்றிற்கு 350 ரூபாயும், ஆயிரத்திற்கும் அதிகமானவைக்கு ஆயிரம் ரூபாயும், 2 ஆயிரத்து 500 சதுர அடிஉள்ள திருமண மண்டபம் மற்றும் சமுதாயக்கூடத்திற்கு 200 ரூபாயும், 2 ஆயிரத்து 500 சதுர அடியிலிருந்து 4 ஆயிரம் சதுர அடிவரை உள்ளவற்றிற்கு 500 ரூபாயும், 4 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள திருமணமண்டபம் மற்றும் சமுதாயக்கூடத்திற்கு ஆயிரம் ரூபாயும், துவக்கப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளிக்கு 500 ரூபாயும், உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைபள்ளிக்கு ஆயிரம் ரூபாயும் கல்லூரிக்கு 3 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கட்டண கழிப்பிடங்களுக்கு: குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு ரூ.75 ம், 500 சதுர அடிக்கு மேல் ஆயிரத்து 200 சதுர அடி வரை உள்ள கட்டடங்களுக்கு 150 ரூபாயும், ஆயிரத்து 200 சதுர அடியிலிருந்து 2 ஆயிரத்து 400 சதுர அடிவரை உள்ள கட்டடங்களுக்கு 200 ரூபாயும், 2 ஆயிரத்து 400 சதுர அடிக்கு மேல் 7 ஆயிரத்து 500 சதுர அடி வரை 350 ரூபாயும், 7 ஆயிரத்து 500 சதுர அடியிலிருந்து 10 ஆயிரம் சதுர அடி வரை 700 ரூபாயும், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் 25 ஆயிரம் சதுர அடி வரையுள்ளவற்றிற்கு ஆயிரம் ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு 5 ஆயிரம் சதுர அடிக்கு 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டணம் 5 ஆண்டிற்கு ஒரு முறை மாநகராட்சி மன்ற ஒப்புதலோடு உயர்த்தப்படும்.

Last Updated on Friday, 01 October 2010 11:34
 


Page 57 of 148