Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

பாதாள சாக்கடை சேவை கட்டணம் தீர்மானம் நிறைவேறியது

Print PDF

தினகரன் 30.09.2010

பாதாள சாக்கடை சேவை கட்டணம் தீர்மானம் நிறைவேறியது

கோவை, செப். 30: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்கு மாதாந்திர சேவை கட்டணத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. கோவை மாநகராட்சி யில் இதுவரை பாதாள சாக் கடை திட்டத்திற்கு மாதாந் திர சேவை கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கிடை யாது. முதல் முறையாக மாதாந்திர சேவை கட்டணத் தை பல்வேறு இனங்களில் வசூலிக்க மாநகராட்சி திட் டது. நேற்று நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 3 முறை தீர்மானம் கொண்டு வந்து பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.

குடியிருப்பு 500 சதுர அடிக்கு குறைவாக இருந் தால் 30 ரூபாய், 500 சதுரடி முதல் 1200 சதுரடி வரை இருந்தால் 50 ரூபாய், 1200 சதுரடி முதல் 2400 சதுரடி வரை இருந்தால் 75 ரூபாய், 2400 சதுரடி முதல் 4 ஆயிரம் சதுரடி வரை இருந்தால் 150 ரூபாய், 4 ஆயிரம் சதுரடிக்கு மேல் இருந்தால் 200 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

வணிக வளாகத்திற்கு கட்டடத்தின் பரப்பிற்கு ஏற்ப 75 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், தொழிற்சாலைகளுக்கு 75 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், மருத்துவமனை, கிளீனிக்கிற்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் (படுக்கை வசதிக்கு ஏற்ப), தங்கும் விடுதிகளில் 500 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரையிலும், ஹாஸ்டல்களுக்கு 60 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், உணவ கம் மற்றும் உணவு விடுதிகளுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையி லும், சினிமா தியேட்டர்களுக்கு 350 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், சமுதாய கூடம், திருமண மண்டபத்திற்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், பள்ளி, கல்லூரிகளில் 500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலும், கட்டண கழிப்பிடங்களில் 500 ரூபாயும் மாதாந்திர சேவை கட்டணம் விதிக்கப்படும். 5 ஆண்டிற்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக பாதாள சாக்கடை வைப்பு 3 ஆயிரம் ரூபாய், தொழிற்சாலை, வணிக நிறுவனம், சிறு ஓட் டல், மருத்துவமனைகளுக்கு வைப்பு தொகை 20 ஆயிரம் ரூபாய், நட்சத்திர ஓட்டல், பெரிய உணவகங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

வரி வசூல் மையத்துக்கு பூட்டு எதற்கு?மாநகராட்சி மீது மக்கள் அதிருப்தி

Print PDF

தினமலர் 29.09.2010

வரி வசூல் மையத்துக்கு பூட்டு எதற்கு?மாநகராட்சி மீது மக்கள் அதிருப்தி

கோவை : மாநகராட்சி வரி வசூல் மையம் மூடப்பட்டதால், பீள மேடு பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.கோவை மாநகராட்சி வரி வசூல் மையம் பீளமேடு, பயனீர் மில் ரோட்டில் உள்ளது. இங்கு வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. சில மாதங்களாக இம்மையம் பூட் டப்பட்டுள்ளதால் வரி வசூல் பணி நடப்பதில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த வரி வசூல் மையம் பீளமேடு பகுதியை மையமாக வைத்தே செயல்பட்டு வந்தது. நான்கு கி.மீ., சுற்றளவிலுள்ள வீடு, தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் என்று 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை செலுத்தி வந்தனர். இந்நிலையில், அலுவலகம் மூடப்பட்டதால், மக்கள் வரி செலுத்த முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலர் வரி செலுத்த தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வரி வசூல் மையத்தை திறக்க ஏற்பாடு செய்யாத மாநகராட்சி, வரிசெலுத்தாமல் நிலுவையில் உள்ள பீளமேடு மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வீடு, கடை, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பீளமேடு பகுதி மக்கள் கூறியதாவது:மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை, மாநகராட்சி பெயரில் வங்கிகளில் நேரடியாக செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் வங்கிகள், வரியினங்களை பெற மறுத்தும், தாமதம் செய்தும் வருகின்றன. டாக்டர் பாலசுந்தரம் ரோட்டிலுள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் வரி செலுத்த சென்றால், பணி அனுபவமில்லாத நபர்களை அங்கு பணியமர்த்தியுள்ளனர். அவர்களால் துரிதமாக பணியாற்றி வரிவசூலித்து, ரசீது வழங்க முடிவதில்லை. யாராவது கேள்வி எழுப்பினால், "வங்கியில் செலுத்துங்கள்' எனக்கூறி, அனுப்பி விடுகின்றனர். வரி செலுத்த அறிவிப்பு செய்யும் மாநகராட்சி நிர்வாகம், அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. பயனீர் மில் ரோட்டில் மூடப்பட்டிருக்கும் வரி வசூல் மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

மாநகராட்சிக்கு சினிமா தியேட்டர் ரூ.4 லட்சம் வரி செலுத்த உத்தரவு

Print PDF

தினமலர் 28.09.2010

மாநகராட்சிக்கு சினிமா தியேட்டர் ரூ.4 லட்சம் வரி செலுத்த உத்தரவு

மதுரை: மதுரை அரசரடி வெள்ளகண்ணு தியேட்டர் உரிமையாளர் தியாகராஜன், மாநகராட்சிக்கு வரி நான்கு லட்சம் ரூபாயை நான்கு மாதங்களுக்குள் செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வெள்ளகண்ணு தியேட்டர் நிர்வாகத்திற்கு, 3.02 லட்சம் ரூபாய் வரி செலுத்துவது குறித்து கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினர். அதை ரத்து செய்ய கோரி தியேட்டர் உரிமையாளர் தியாகராஜன் ரிட் மனு செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, பாதி தொகையை செலுத்த உத்தரவிட்டது. அதை தியேட்டர் நிர்வாகம் செலுத்தவில்லை. இந்நிலையில் மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் வக்கீல் ரவிசங்கர் ஆஜரானார். நீதிபதி, தியேட்டர் உரிமையாளர் நான்கு லட்சம் ரூபாயை நான்கு வாரங்களுக்குள் மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். தவறினால் மாநகராட்சி அதை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்,என உத்தரவிட்டார்.

 


Page 58 of 148