Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நூலகத் துறைக்கு வரித்தொகை "டிமிக்கி' : சென்னை மாநகராட்சி ரூ.40 கோடி நிலுவை

Print PDF

தினமலர் 28.09.2010

நூலகத் துறைக்கு வரித்தொகை "டிமிக்கி' : சென்னை மாநகராட்சி ரூ.40 கோடி நிலுவை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் வரி வருவாயில் 10 சதவீதத்தை, பொது நூலகத் துறைக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு இருந்தபோதும், எந்த அமைப்புகளும் 100 சதவீதம் அளவிற்கு வரியை செலுத்துவதில்லை என, பொது நூலகத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர். சென்னை மாநகராட்சி மட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.

மாநிலம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. மற்ற துறைகளைப் போல், நூலகத் துறைக்கு பெரிய அளவில் வருவாய் கிடையாது. அரசு ஒதுக்கும் நிதியைக் கொண்டும், வாசகர்கள் மூலம் வசூலிக்கப்படும் சந்தா தொகையைக் கொண்டும் தான், இந்த துறை இயங்குகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் மொத்த வரி வருவாயில், 10 சதவீத நிதியை பொது நூலகத்துறைக்கு வழங்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அதன்படி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள், வரி வருவாயில் 10 சதவீதத்தை, நூலகத்துறைக்கு வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், இந்த 10 சதவீத தொகையை முழு அளவில், நூலகத் துறைக்கு வழங்குவதில்லை என்றும், அந்த தொகையில் 40 சதவீதம், 50 சதவீதம் அளவிற்கே வழங்குகின்றனர் என்றும் நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

மாநகராட்சிகள் மூலம் வரும் வரி வருவாய் தான் கணிசமாக இருக்கிறது. ஆனால், மாநகராட்சிகளும் முழு தொகையை செலுத்துவதில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சிகளில் அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியிடம் இருந்து தான், நூலகத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு, கடந்த ஆண்டு 360 கோடி ரூபாய் அளவிற்கு வரி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு, 400 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு வருவாயில், 10 சதவீதமாக 36 கோடி ரூபாய், நூலகத்துறைக்கு வழங்க வேண்டும்.

ஆனால், பாதி தொகை மட்டுமே வழங்கியிருப்பதாக, நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2008-09, 2009-10 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 40 கோடி ரூபாயை சென்னை மாநகராட்சி நிலுவை வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறும்போது, "உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை வழங்கினால், கிராமப்புறங்களில் கூடுதலாக நூலகங்கள் திறக்கவும், நூலகங்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உதவியாக இருக்கும். எந்த உள்ளாட்சி அமைப்புகளும், முழு தொகையை வழங்குவதே கிடையாது; அரைகுறையாகத் தான் வழங்குகின்றன. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நிலுவைத் தொகையை வழங்கினால், நூலகத் துறைக்கு கணிசமான அளவிற்கு நிதி கிடைக்கும்' என்றனர்.

-நமது சிறப்பு நிருபர்-

 

வரி பாக்கியில் ரூ.4 லட்சம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினகரன் 28.09.2010

வரி பாக்கியில் ரூ.4 லட்சம் செலுத்த ஐகோர்ட் உத்தரவு

மதுரை, செப். 28: சொத்து வரி பாக்கியில் ரூ.4 லட் சத்தை 4 வாரத்தில் மாநகராட்சியில் செலுத்த தியேட் டர் உரிமையாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வெள்ளக்கண்ணு தியேட்டர் உரிமையாளர் தியாகராஜன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘சொத்து வரி பாக்கி ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 92 செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் ரவிசங்கர் வாதிடுகையில், ‘பாக்கிப்பணத்தில் பகுதியை கட்டுவதாக மனுதாரர் தெரிவித்தார். ஆனால், செலுத்தவில்லைஎன்றார்.

மனுதாரர் வரி பாக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ரூ.9 லட்சம் பாக்கியிருப்பதாகவும், பகு தியை கட்டுவதாகவும் கூறியுள்ளார். அவர் 4 வாரத் தில் ரூ.4 லட்சம் கட்ட வேண் டும். வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது, வரிப்பாக்கி குறைவாக இருந்தால் கட்டிய பணத்தை திரும்ப பெறலாம்என நீதிபதி உத்தரவிட்டார்.

 

பாதாள சாக்கடை சேவை கட்டணம் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு

Print PDF

தினகரன் 28.09.2010

பாதாள சாக்கடை சேவை கட்டணம் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு

கோவை, செப். 28:கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்கு மாதாந்திர சேவை கட்டணத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

கோவை மாநகராட்சியில் இதுவரை பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாதாந்திர சேவை கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கிடையாது. முதல் முறையாக மாதாந்திர சேவை கட்டணத்தை பல்வேறு இனங்களில் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாளை நடக்கும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் பிரதானமாக இடம் பெறவுள்ளது. குடியிருப்பு, தொழிற்சாலை, வணிகம், கல்வி நிறுவனம் என பல்வேறு வகைகளில் மாதாந்திர சேவை கட்டணம் விதிக்கப்படவுள்ளது. குடியிருப்புகளுக்கு சதுர அடிக்கு ஏற்ப சேவை கட்டணம் விதிக்கப்படும். 500 சதுர அடி பரப்பளவில் வீடு இருந்தால் அந்த வீட்டிற்கான பாதாள சாக்கடை சேவை கட்டணம் 30 ரூபாய். பரப்பளவிற்கு ஏற்ப சேவை கட்டணம் உயரும். 4 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் வீடு இருந்தால் சேவை கட்டணமாக 200 ரூபாய் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வணிக இணைப்புக்கு 75 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், தொழிற்சாலைகளுக்கு 75 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், மருத்துவமனைகளுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் (படுக்கை வசதிக்கு ஏற்ப) , தங்கும் விடுதிகளில் 160 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், மூன்று நட்சத்திர ஓட்டல்களுக்கு 2500 ரூபாய் வரையிலும், சினிமா தியேட்டர்களில் 350 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், திருமண மண்டபத்திற்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், பள்ளி, கல்லூரிகளில் 500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலும், கட்டண கழிப்பிடங்களில் 500 ரூபாய் வரையிலும் சேவை கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆண்டிற்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்ற கூட்டத்தில் விவாதத்திற்கு பின்னர் மாதாந்திர சேவை கட்டண முறையில் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மாநகராட்சியில் 377.17 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கிறது. உக்கடத்தில் 52 கோடி ரூபாய் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடு, வணிகம், தொழில், தங்கும் விடுதி உள்ளிட்ட இனங்களுக்கு மாதாந்திர சேவை கட்டணம் பெரும் சுமையாக இருக்கும். குடியிருப்புகளில் வசிப்பவர்கள், சாக்கடை இணைப்பிற்கு தொகை செலவிடவேண்டும். எனவே மாதாந்திர சேவை கட்டண நடைமுறை கூடாது என கம்யூ., கவுன்சிலர்கள் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சாக்கடை இணைப்பிற்கு டெபாசிட் பெறப்படுகிறது. அதற்கு மேலும் மாதாந்திர சேவை கட்டணம் எதற்கு, ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தொகை கிடைக்கும், என்ன சேவை செய்ய போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகத்தினர், "சாக்கடை நீரை சுத்திகரிக்கவேண்டும். அதற்கு அதிக தொகை செலவாகும். சாக்கடை இணைப்பு பராமரிக்கவேண்டும். எனவே மாதாந்திர சேவை கட்டணம் தேவை, " தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற பல்வேறு கட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு காட்டவுள்ளனர்.

 


Page 59 of 148