Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி வரி செலுத்த செப்., 30 இறுதி நாள்

Print PDF

தினமலர் 27.09.2010

மாநகராட்சி வரி செலுத்த செப்., 30 இறுதி நாள்

கோவை: "மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவைகளை வரும் 30ம் தேதிக்குள் கட்ட வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிக்கை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2010 - 2011 முதலாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர நிலுவைகளை வரும் 30ம் தேதிக்குள் கட்ட வேண்டும். நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்ய மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் 2010 - 2011 முதலாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி, குடிநீர் கட்டணம் முதலிய நிலுவைகளை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

 

குடிநீர் டெபாசிட் வசூலில் கெடுபிடி;கம்பத்தில் பொதுமக்கள் அதிருப்தி

Print PDF

தினமலர் 27.09.2010

குடிநீர் டெபாசிட் வசூலில் கெடுபிடி;கம்பத்தில் பொதுமக்கள் அதிருப்தி

கம்பம்: குடிநீர் டெபாசிட் வசூலில் நகராட்சி பணியாளர்கள் கெடுபிடி செய்து வருவதால் பொதுமக்கள் அதிருப்திருக்குள்ளாகியுள்ளனர். கம்பம் நகராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் 10 ஆயிரத்து 890 உள்ளது. மாத கட்டணமாக 41 ரூபாய் நகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. சமீபகாலமாக நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய குடிநீர் மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது 15 கோடி ரூபாய்க்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடுகளுக்கு கடன் வாங்க "டுபிசெல்' நிறுவனத்தை நகராட்சி அதிகாரிகள் அணுகிய போது, கடனை திருப்பிச் செலுத்த டெபாசிட் மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நகராட்சிக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் வீட்டு இணைப்புகளுக்கு டெபாசிட் கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் என்று இருந்ததை நான்காயிரமாக உயர்த்த கவுன்சில் அனுமதி வழங்கியது. டெபாசிட் உயர்த்தியதை வசூல் செய்வதில் தற்போது நகராட்சி தீவிராக இறங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது; புதிய திட்டத்திற்காக டெபாசிட் உயர்த்தப் பட்டது என்கின்றனர். இத்திட்டம் இன்னும் துவங்கவே இல்லை. இது செயல்பாட்டிற்கு வர பல ஆண்டுகள் ஆகும். திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு டெபாசிட் மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம். அதைவிட்டு விட்டு நகராட்சி நிர்வாகம் தற்போதே கெடுபிடி வசூலில் ஈடுபட்டுள்ளது மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. டெபாசிட் உயர்வை 15 நாட்களுக்கு செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என்று பணியாளர்கள் மிரட்டுகின்றனர் என்றனர்.

 

வீட்டுவரி அதிகம் என்றால் மேல்முறையீடு செய்யலாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

Print PDF

தினகரன் 27.09.2010

வீட்டுவரி அதிகம் என்றால் மேல்முறையீடு செய்யலாம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

ஈரோடு, செப். 27: ஈரோடு மாநகராட்சி வீடுகளுக்கு விதிக்கப்படும் வரி அதிகமென கருதும் நுகர்வோர்கள் மேல் முறையீட்டு மனுவை வரிவிதிப்பு அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து தகுந்த பரிகாரம் பெறலாம். தீர்ப்பாயத்திற்கு பிரத்யேகமாக நீதித்துறையில் இருந்து நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தீர்ப்பாயத்திற்கான அனைத்து சட்ட திட்டங்களும் அரசால் நிர்ணயிக்கப்படும். வரிவிதிப்பின் பேரில் பெறப்பட்டுள்ள அனைத்து மேல் முறையீட்டு மனுக்களும் 5 மாதங்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும். தீர்ப்பாயத்தில் வரிமேல் முறையீடு செய்யவும் சொத்தின் உரிமையாளர்கள் நேரிலோ அல்லது அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் மூலமாகவும் நேரில் ஆஜராகலாம்.

தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் திருப்தியடையாத நிலையில் அதிருப்திக்குள்ள வரித் தொகை முழுவதையும் மாநகராட்சியில் செலுத்தி விட்டு மாவட்ட நீதிபதிக்கு மேல்முறையீடு செய்யலாம், என மாநகராட்சி ஆணை யாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 


Page 60 of 148