Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி நடமாடும் வரி வசூல் வாகனம் நிற்கும் இடங்கள்

Print PDF

தினமணி 20.09.2010

மாநகராட்சி நடமாடும் வரி வசூல் வாகனம் நிற்கும் இடங்கள்

திருச்சி, செப். 19: திருச்சி மாநகராட்சியின் நடமாடும் வரி வசூல் வாகனம், செப். 20 முதல் 25-ம் தேதி வரை நிற்கும் இடங்களை ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப். 20 (திங்கள்கிழமை): வார்டு எண் 52: காலை 10-11 மணி- வயலூர் பிரதான சாலை, பிஜி நாயுடு ஸ்வீட் ஸ்டால் அருகில். முற்பகல் 11-12 மணி- அம்மையப்பநகர் பிரதான சாலை, பெட்ரோல் நிலையம் அருகில். வார்டு எண் 53: பகல் 12-1 மணி- சண்முகாநகர் பிரதான சாலை, பகல் 1-2 மணி- ஆர்.சி. பள்ளி அருகே ரேஷன் கடை. வார்டு எண் 54: பிற்பகல் 2-3 மணி- ராமலிங்கநகர் முதல் சாலை அஞ்சலகம் அருகில், பிற்பகல் 3-4 மணி- அகமது காலனி வடக்கு முத்துராஜா தெரு சந்திப்பு, மாலை 4-5 மணி- புத்தூர் அக்ரஹாரம் மந்தை அருகில்.

செப். 22 (புதன்கிழமை): வார்டு எண் 41: காலை 10-10.30 மணி- மின்நகர் குடியிருப்போர் நலச் சங்கக் கட்டடம் அருகில், காஜாநகர். காலை 10.30-11 மணி- ஜெகன்மாதா தேவாலயம் அருகில் கேகே நகர் பிரதான சாலை. முற்பகல் 11-11.30 மணி- ரங்காநகர், இந்தியன் வங்கி அருகில். முற்பகல் 11.30-12 மணி- காலனி பிரதான சாலை, ராக்போர்ட் மசாலா அருகில். பகல் 12-12.30 மணி- அன்புநகர் பிள்ளையார் கோயில் அருகில். பகல் 12.30-2 மணி- மதுரை பிரதான சாலை, மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்.

வார்டு எண் 45: பிற்பகல் 2-3 மணி- ஆர்எம்எஸ் காலனி படிப்பகம், கருமண்டபம். பிற்பகல் 3-3.30 மணி- சக்திநகர் ராஜராஜேசுவரி கோயில் அருகில். பிற்பகல் 3.30-4 மணி- கல்யாணசுந்தரம் நகர், ஐஓபி அருகில். மாலை 4-4.30 மணி- பொன்னகர் தொடக்கப் பள்ளி. மாலை 4.30-5 மணி- ஏஜி சர்ச் அருகில்.

செப். 23 (வியாழக்கிழமை): வார்டு 55: காலை 10-11 மணி- குறத்தெரு சந்திப்பு. முற்பகல் 11-11.30 மணி- பாளையம்பஜார் விக்னேஷ் குடியிருப்பு அருகில். வார்டு 56: முற்பகல் 11.30-12.30 மணி- தில்லைநகர் 1,5,10 குறுக்குச் சாலை, பகல் 12.30-1 மணி- பிரதான சாலை தில்லைநகர், பகல் 1-2 மணி- சாமிநாத சாஸ்திரி சாலை.

வார்டு 57: பிற்பகல் 2-3 மணி- திருச்சி டவர், சாலைரோடு, எம்ஏஎம் குடியிருப்பு, பிற்பகல் 3-3.30 மணி- விக்னேஷ் எம்பையர் சாலைரோடு. பிற்பகல் 3.30-4 மணி- சாலைரோடு, ருக்மணி பேருந்து நிறுத்தம். மாலை 4-4.30 மணி- பாலாஜி குடியிருப்பு, சிவசக்தி, கங்கா, யமுனா, காவேரி இமேஜ். மாலை 4.30-5 மணி- விக்னேஷ் பிளாசா.

செப். 24 (வெள்ளிக்கிழமை): வார்டு 49: காலை 10-11 மணி- காயிதே மில்லத் நகர். காலை 11-12 மணி- காஜா தோப்பு. வார்டு 50: பகல் 12-12.30 மணி- அண்ணாநகர். பகல் 12.30-1 மணி- விசுவநாதபுரம். பகல் 1-1.30 மணி- சேஷபுரம். பகல் 1.30-2 மணி- விநாயகபுரம். பிற்பகல் 2-3 மணி- தென்னூர் ஹைரோடு. வார்டு 51: பிற்பகல் 3-4 மணி- ஜெனரல் பஜார் சாலை, பிற்பகல் 4-5 மணி- மூலைக்கொல்லைத் தெரு.

செப். 25 (சனிக்கிழமை): வார்டு 40: காலை 10-11 மணி- எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி மருந்தகம் அருகில். முற்பகல் 11-12 மணி- ஆர்எம்எஸ் காலனி மாநகராட்சி அலுவலகம் அருகில். முற்பகல் 12-1 மணி- விஸ்வாஸ் நகர், கருமண்டபம்.

 

மாநகராட்சி அரையாண்டு வரியினம் செலுத்த கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 20.09.2010

மாநகராட்சி அரையாண்டு வரியினம் செலுத்த கமிஷனர் அறிவிப்பு

திருச்சி: "திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு, வணிக உபயோகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு சொத்துவரி விதிக்கப்பட்டு 1994ம் ஆண்டின் திருச்சி மாநகராட்சி சட்டம் 2வது அட்டவணையில் பகுதி 4ன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு அரையாண்டு துவங்கிய 15 நாட்களுக்குள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் சேவைக் கட்டணம் ஆகிய இனங்களுக்கான கேட்புத் தொகையை செலுத்த வேண்டும்.

அதன்படி, 2010 - 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி துவக்கமான முதல் அரையாண்டுக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது. அரையாண்டு முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையிலும், இதுவரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் அதிக நிலுவையில் உள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக நடப்பாண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான கேட்பு எழுப்பப்பட்டுள்ளது. வரிவிதிப்பாளர் இரண்டு அரையாண்டுக்கும் சேர்த்து வரியினங்களை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குடியிருப்பு, வணிக உபயோகம், மற்றும் தொழிற்சாலை கட்டட உரிமையாளர் தாங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்ற வரியினங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மாநகராட்சிக்கான வரிகளை உடனே செலுத்த அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 16.09.2010

மாநகராட்சிக்கான வரிகளை உடனே செலுத்த அறிவுறுத்தல்

திருச்சி, செப். 15: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, வரியில்லா இனங்கள் நிலுவை மற்றும் நடப்பு கேட்புத் தொகைகளை இந்த மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த பொதுமக்களுக்கு ஆணையர் த.தி. பால்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்புக் கட்டடங்கள், வணிக உபயோகக் கட்டடங்கள், தொழில்சாலைக் கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டு 1994-ம் ஆண்டின் திருச்சி மாநகராட்சி சட்டம் 2-வது அட்டவணையில் பகுதி 4-ன்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளுக்குள்பட்டு ஒவ்வொரு அரையாண்டு ஆரம்பித்த 15 நாள்களுக்குள் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், புதை வடிகால் சேவைக் கட்டணம் ஆகிய இனங்களுக்கான கேட்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.

அதாவது, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள்ளும், அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். அதன்படி, 2010-2011 ஆம் ஆண்டு ஏப். 1-ம் தேதி முதல் ஆரம்பமான முதல் அரையாண்டுக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையிலும், அரையாண்டுக்கான காலம் முடிவடைய இன்னும் 15 நாள்களே உள்ள நிலையிலும், இதுவரை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்கள் அதிக நிலுவையில் உள்ளன.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக 2010-2011 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான கேட்பு எழுப்பப்பட்டுள்ளதால், வரி விதிப்பாளர்கள் இரண்டு அரையாண்டுகளுக்கும் சேர்த்து வரியினங்களை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டட உரிமையாளர்கள், வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், தொழில்சாலைக் கட்டட உரிமையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் போன்ற வரியினங்களை மாநகராட்சி மைய அலுவலகம், 4 கோட்ட அலுவலகங்கள், மாநகராட்சி சேவை மையங்கள், நடமாடும் கணினி வரி வசூல் மையம் ஆகிய இடங்களில் நிலுவையின்றி செப். 30-க்குள் செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


Page 62 of 148