Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்துவதில் அலட்சியம்! தொடரும் நிதி இழப்பால் அதிகாரிகள் கலக்கம்

Print PDF

தினமலர் 14.09.2010

வரி செலுத்துவதில் அலட்சியம்! தொடரும் நிதி இழப்பால் அதிகாரிகள் கலக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் எளிமையாக வரி செலுத்த பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலோனோர் வரி செலுத்தாமல் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், மாநகராட்சி கடை வாடகை, தொழில் வரி உள்ளிட்டவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. னால், மாநகரில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் முறையாக வரி செலுத்துவது கிடையாது.ஆண்டுக்கணக்கில் பெரும்பாலோனோர் வரியை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சியில் பட்ஜெட் பற்றாக்குறை தாக்கல் செய்யப்படுகிறது. மாநகராட்சியில் வருவாயை பெருக்க மாநகராட்சி சார்பில் வரி வசூல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நான்கு மண்டல அலுவலகங்களிலும் வரியை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரி வசூல் வானம் மூலம் பொதுமக்கள் வசதிக்கும் பகுதிக்கே வந்து மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூல் பணியில் ஈடுபடுகின்றனர்.

மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வரியை எளிமையாக செலுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல வார்டுகளில் பொதுமக்கள் வரியை செலுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர். நடப்பு 2010 மார்ச் 31 வரை சொத்துவரி நிலுவை தொகை நான்கு கோடியே 81 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.நடப்பு 2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை நான்கு கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும். மார்ச் வரை குடிநீர் கட்டணம் ஆறு கோடியே 76 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை உள்ளது. செப்டம்பர் வரை ஆறு கோடியே மூன்று லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும்.வழித்தட கிராமப்புற பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்களுக்கான கட்டணம் மார்ச் வரை 24 லட்சம், ஏப்ரல்- செப்டம்பர் வரை 81 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும். தொழில் வரி மூலம் மார்ச் வரை 91 லட்சத்து 42 ஆயிரம், ஏப்ரல்-செப்டம்பர் வரை ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும்.

சில ஆண்டாக சேலம் மாநகராட்சியில் புதிதாக எந்த திட்டப்பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும், அரசின் மானியம் மற்றும் உலக வங்கியின் கடன் ஆகியவற்றையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழலில், கோடிக்கணக்கில் வரித்தொகை நிலுவையாக இருப்பது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.வரி வசூல் பணிக்காக பல்வேறு சிறப்பு முகாம்கள் மற்றும் நடமாடும் வரி வசூல் வாகனம் மண்டல அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் வசிக்கும் அடிப்படை பிரச்னைகளுக்காக உரிமையோடு குரல் கொடுக்கும் பொதுமக்கள், அவர்களாகவே முன் வந்து வரி பணத்தை செலுத்த வேண்டியது அவசியமாகும்.

 

நெல்லை மாநகராட்சியில் உடனடிவரிவிதிப்பு புதிய சேவை அறிமுகம்: மேயர் ஏ.எல்.எஸ்., துவக்கினார்

Print PDF

தினமலர் 14.09.2010

நெல்லை மாநகராட்சியில் உடனடிவரிவிதிப்பு புதிய சேவை அறிமுகம்: மேயர் ஏ.எல்.எஸ்., துவக்கினார்

திருநெல்வேலி:நெல்லை மாநகரட்சியில் உடனடி வரிவிதிப்பு சேவையை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் துவக்கிவைத்தார்.நெல்லை மாநகராட்சியில் வீடுகள், கட்டடங்களுக்கு மாநகராட்சி வருவாய் அலுவலர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வரிகள் விதிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இதனால் காலவிரையமும், வரிவிதிப்பில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உடனடி வரிவிதிப்பு சேவை மையம் நெல்லை மாநகராட்சியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று துவக்கிவைத்தார். பொதுமக்களான தேவிபாலா, லெனின்துரை, சுஜாதா ஆகியோருக்கு வரிவிதிப்புக்கான உத்தரவுகளை மேயர் வழங்கினார். இதில் துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன், மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், முகம்மது மைதீன், சுப்பிரமணியன், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர் சுல்தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடனடி வரிவிதிப்புசேவை பெற வழி என்ன?.மாநகராட்சி நிர்வாகத்தை மேம்படுத்தி ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரே தாம் கட்டியுள்ள கட்டடத்தின் வெளிப்புற அளவு, கட்டத்தின் பயன்பாடு, கூரையின் தன்மை, கட்டுமானம் முடிவுற்ற காலம் மற்றும் கட்டுமானம் அமைந்துள்ள வார்டு எண், இடம் ஆகிய விபரங்களை சமர்பித்து, அதன் அடிப்படையில் சொத்துவரி விதிப்பு செய்து பொதுமக்கள் உடனடியாக பயன்பெறும் வகையில் எளிமையான முறையில் படிவத்தில் பூர்த்தி செய்து தர ஏதுவாக நெல்லை மாநகராட்சி இணைய தளத்தில் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. டாõ://õடசஙைமநமெநடயவசன.கவö.டங என்ற இணைய தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிவத்தினை மாநகராட்சி சேவை மையத்திலும் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விபரங்களை கட்டடத்தின் உரிமையாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தினை தாங்களே பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து, அத்துடன் புதியதாக கட்டியுள்ள கட்டுமானத்திற்கு உரிய கட்டட அனுமதி பெற்ற வரைபட ஆவணம் மற்றும் சம்பந்தப்பட்ட பத்திர நகர் (அட்டஸ்டடு காப்பி) ஆகியவற்றை இணைத்து (இரட்டை பிரதிகளில்) மைய அலுவலகத்தில் கவுண்டரில் சமர்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ளலாம். மனுதாரரரால் சமர்பிக்கப்பட்ட தகவல் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் மாநகராட்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்றே வரி செலுத்துவதற்கான சிறப்பு அறிவிப்பு தயார் செய்து கட்டத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கை பெறப்படுமாயின் அதன் வரிசை அடிப்படையில் வரிவிதிப்பு கேட்பு வழங்கப்படும்.

மனுதாரர் சமர்பித்த விபரங்கள் குறித்து சரித்தன்மை அறிய சம்பந்தப்பட்ட மண்டல வருவாய் உதவியாளர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் மனுதாரரின் கட்டுமான இடத்தை தல ஆய்வு செய்து விபரங்களின் சரித்தன்மை உறுதி செய்யப்படும்.மேலும் மனுதாரர் சமர்பித்துள்ள ஆவணங்களின் குறைபாடுகள் மற்றும் தகவல் விபரங்கள் தவறாக இருப்பின் மனுதாரருக்கு வழங்கப்படுகிற சொத்துவரி சிறப்பு அறிவிப்பினை ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு புதிய வரிவிதிப்பு செய்யப்படும். இதன் மூலம் நெல்லை மாநகர மக்கள் புதிதாக கட்டப்படும் கட்டங்களுக்கு தேவையான மின் இணைப்பு பெறுவதற்கும் மற்றும் குடிநீர் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவும் தேவையான சொத்துவரி விதிப்பு பெற இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து கட்டடங்களுக்கான வரிவிதிப்புகளும் இந்த முறையிலேயே இனிவரும் காலங்களில் செயல்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

மாநகராட்சி வரிவிதிப்பு முறையில் புதிய நடைமுறை செப். 13ம் தேதி முதல் அமல்

Print PDF

னகரன் 09.09.2010

மாநகராட்சி வரிவிதிப்பு முறையில் புதிய நடைமுறை செப். 13ம் தேதி முதல் அமல்

நெல்லை, செப். 9: நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சொத்து வரி விதிப்பு செய்து பொதுமக்கள் உடனடியாக ஆணை பெறும் வகையில் எளிமையான முறையில் நெல்லை மாநகராட்சி இணையதளத்தில் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படிவத்தினை மாநகராட்சி சேவை மையத்திலும் பெற்றுக் கொள்ள லாம்.

கட்டிடத்தின் உரிமையா ளர் இப்படிவத்தினை பூர்த்தி செய்து, அத்துடன் புதிதாக கட்டியுள்ள கட்டுமானத்திற்கு, கட்டிட அனுமதி பெற்ற வரைபட ஆவணம், மற்றும் பத்திரநகல் ஆகியவற்றை இரட்டை பிரதிகளில் இணைத்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் சமர்ப்பித்து ஒப்புகை பெறலாம். மனுதாரர் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் மற்றும் ஆவணங்க ளின் அடிப்படையில் உட னடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அன்றைய தினமே வரி செலுத்த சிறப்பு அறிவிப்பு கட்டிட உரிமையாளருக்கு வழங்கப்படும்.

மனுதாரர் சமர்ப்பித்த விபரங்கள் குறித்து சரியான தன்மையை ஆராய மண்டல வருவாய் உதவியாளர் மற்றும் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் மனுதாரரின் கட்டுமான இடத்தை தல ஆய்வு செய்வர். மனுதாரர் ஆவணங்களில் குறைபாடு கள் இருப்பின், சொத்துவரிக் கான சிறப்பு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு புதிய வரி விதிப்பு செய்யப்படும்.

நெல்லை மாநகர மக்கள் புதிதாக கட்டும் கட்டிடங்களுக்கு தேவையான மின் இணைப்பு பெறவும், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு பெறவும் தேவையான சொத்து வரிவிதிப்பு உடனடி யாக பெற்றிட, இவ்வாய்ப் பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டம் வரும் 13ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 64 of 148