Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி சீரமைப்புக்கான மேல்முறையீட்டு குழு : கரூர் நகராட்சி கமிஷனர் விளக்கம்

Print PDF

தினமலர் 31.08.2010

வரி சீரமைப்புக்கான மேல்முறையீட்டு குழு : கரூர் நகராட்சி கமிஷனர் விளக்கம்

கரூர்: கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில், பெத்தாச்சி மன்றத்தில் நடந்தது. கமிஷனர் உமாபதி, துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:கவுன்சிலர் மாரப்பன்(தி.மு..,): நகராட்சியில் வரி தொடர்பான மேல்முறையீட்டு குழு செயல்படுகிறதா? வரி திருத்தம் கோரி மனு அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?கமிஷனர் உமாபதி: நகராட்சி பகுதியில் ஏற்கனவே தகுதிவாரியாக வரையறுக்கப்பட்ட, மூன்று பிரிவுகளில் உள்ள பகுதியை பொறுத்து கட்டிட வரி நிர்ணயிக்கப்படுகிறது. மேல்முறையீட்டு குழு தற்போதும் உள்ளது. ஆனால், இதற்கு முறையான விண்ணப்பம் அளித்தால் குழுவின் பார்வைக்கு செல்லும். முறையீட்டு மனுவில், வரி நிர்ணயித்தலில் உள்ள குறைபாட்டினை சரியாக குறிப்பிட்டு அளிக்க வேண்டும்.மனுவை ஆய்வு செய்து, குழுவுக்கு அளிப்பது குறித்து, மனுவின் தகுதி அடிப்படையில் முடிவு செய்ய கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது. தகுதியில்லாத விண்ணப்பம், குழு பார்வைக்கு அனுப்புவது இல்லை. அதே சமயம், மனுவில் உள்ள குறைபாடு குறித்து சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.மணிராஜ்(தி.மு..,): மனு தள்ளுபடியாவது குறித்து மனுதாரருக்கு விளக்கம் அளிக்கப்படுவதுபோல், சம்மந்தப்பட்ட கவுன்சிலருக்கும் தகவல் அளிக்க வேண்டும்.கதிரவன்(தி.மு..,): இரட்டை வாய்க்கால் சீரமைப்பு பணி நட க்கும் போது, சிலர் தங்கள் கட்டிடங்களில் இருந்து "பிவிசி' குழாய் மூலம் நேரடியாக வாய்க்காலில் கழிவுநீர் கொட்டுகின்றனர்.


கமிஷனர்: உடனடியாக அத்தகைய குழாய் அனைத்தும் அடைக்கப்படும்.கதிரவன்: மக்கள்பாதை பாலம் ஏற்கனவே இருந்ததைவிட சிறிய அளவில் தற்போது கட்டப்படுகிறது. விரிவாக்கப்படவில்லை என்றாலும், ஏற்கனவே இருந்த அளவிலாவது பாலம் வேண்டும்.கமிஷனர்: குறைபாடு சரி செய்யப்படும்.மணிராஜ்: கரூர் பஸ் ஸ்டா ண்ட் இலவச கழிப்பிடம் சுத்த ம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. நடவடிக்கை தேவை.கமிஷனர்: இதற்கான டெண்டர் பலமுறை வைக்கப்பட்டும் எவரும் எடுக்கவில்லை. நகராட்சி சுகாதாரத்துறை மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.தொடர்ந்து அவசர கூட்டம் நடந்தது.கூட்டத்தில், 35 தீர்மானங்கள் வைக்கப்பட்டதில், கரூர் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் குறித்தானவை மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டுகள் 28, 18 ஆகியவற்றில் சின்டெக்ஸ் தொட்டியுடன் ஆழ்குழாய் கிணறு வசதி மற்றும் வார்டுகள் 29, 32 மற்றும் 30 ஆகியவற்றில் பயணிகள் நிழற்குடை குறித்தான அனைத்து தீர்மானமும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மாநகராட்சி குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தல்

Print PDF

தினமணி 30.08.2010

மாநகராட்சி குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தல்

ஈரோடு, ஆக. 29: குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று, ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத் தலைவர் டி..வெங்கடாசலம், துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.நல்லசாமி, செயலர் ந.பாரதி மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி மேயர், ஆணையரிடம் வழங்கிய மனு விவரம்:

காவிரிக் கரையோரம் ஈரோடு மாநகராட்சி அமைந்திருந்த போதிலும், மாநகர மக்களுக்கு நாள்தோறும் சீரான, தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்க இயலாத நிலையில் மாநகராட்சி உள்ளது.

மழைக்காலத்தில் குடிநீர்க் குழாயில் மண் அடைத்துக் கொள்கிறது என்றும், கோடை காலத்தில் மின்வெட்டு, ஆற்றில் தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் வாரத்திற்கு இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில பகுதிகளில் நடுநிசியில்தான் தண்ணீர் விடப்படுகிறது.

போதுமான குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையையும், கட்டணத்தையும் பலமடங்கு உயர்த்த மாநகராட்சி முயற்சித்து வருகிறது. குடிநீர் விநியோகம் சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமே தவிர, வணிக நோக்கில் இருக்கக் கூடாது. மேட்டூரில் இருந்து குழாய் மூலம் ஈரோட்டுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்படும் வரை கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

 

மாநகராட்சி குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தல்

Print PDF

தினமணி 30.08.2010

மாநகராட்சி குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தல்

ஈரோடு, ஆக. 29: குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று, ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத் தலைவர் டி..வெங்கடாசலம், துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.நல்லசாமி, செயலர் ந.பாரதி மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி மேயர், ஆணையரிடம் வழங்கிய மனு விவரம்:

காவிரிக் கரையோரம் ஈரோடு மாநகராட்சி அமைந்திருந்த போதிலும், மாநகர மக்களுக்கு நாள்தோறும் சீரான, தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்க இயலாத நிலையில் மாநகராட்சி உள்ளது. மழைக்காலத்தில் குடிநீர்க் குழாயில் மண் அடைத்துக் கொள்கிறது என்றும், கோடை காலத்தில் மின்வெட்டு, ஆற்றில் தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளில் வாரத்திற்கு இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில பகுதிகளில் நடுநிசியில்தான் தண்ணீர் விடப்படுகிறது. போதுமான குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையையும், கட்டணத்தையும் பலமடங்கு உயர்த்த மாநகராட்சி முயற்சித்து வருகிறது. குடிநீர் விநியோகம் சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமே தவிர, வணிக நோக்கில் இருக்கக் கூடாது. மேட்டூரில் இருந்து குழாய் மூலம் ஈரோட்டுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்படும் வரை கட்டணத்தை உயர்த்தக் கூடாது.

 


Page 67 of 148