Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் வாகனம் நிற்குமிடங்கள்

Print PDF

தினமணி 30.08.2010

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் நடமாடும் வரி வசூல் வாகனம் நிற்குமிடங்கள்

திருச்சி, ஆக. 29: திருச்சி மாநகராட்சியின் நடமாடும் வரி வசூல் வாகனம் திங்கள்கிழமை முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை ஸ்ரீரங்கம் கோட்டப் பகுதிகளில் நிற்குமிடங்களை ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆக. 30 (திங்கள்கிழமை): காலை 10 - பகல் 12 மணி வரை தெற்கு சித்திரை வீதி கூட்டுறவு வங்கி அருகில். பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழச்சித்திர வீதி டாக்டர் ராஜன் மாநகராட்சிப் பள்ளி அருகில். பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை காந்தி ரோடு, எல்ஐசி அருகில்.

ஆக. 31 (செவ்வாய்க்கிழமை): காலை 10 - பகல் 12 மணி வரை வாசுதேவன் தெரு வார்டு அலுவலகம் அருகில், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெரியார் நகர், ராஜகணபதி கோயில் பின்புறமுள்ள ஆடிட்டோரியம் அருகில், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தெற்கு உள்வீதி குபேரலிங்கம் செல்லும் வழி அருகில்.

செப். 1 (புதன்கிழமை): காலை 10 - பகல் 12 மணி வரை பாரதியார் தெரு மாரியம்மன் கோயில் அருகில், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காவேரி நகர் சிதம்பரம் மகால் அருகில், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டர்வொர்த் சாலை இந்து மிஷன் மாநகராட்சி பள்ளி அருகில். செப். 2 (வியாழக்கிழமை): காலை 10 - பிற்பகல் 2 மணி வரை சின்னக்கடை வீதி சந்தி வீரப்பன் கோயில் சந்திப்பு, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஜீவாநகர் எல்லை மாரியம்மன் கோயில் அருகில். செப். 3 (வெள்ளிக்கிழமை): காலை 10 - பிற்பகல் 1 மணி வரை பெரியகடைவீதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை காசிப்பாளையம் ராஜேசுவரி மருத்துவமனை அருகில், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சந்துக்கடை தர்கா அருகில்.

செப். 4 (சனிக்கிழமை): காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பாஸ்போர்ட் அலுவலகம் பெரிய கடைவீதி ஜின்னா தெரு கார்னர்.

இந்த நடமாடும் கணினி வரி வசூல் வாகனங்களில் அந்தந்த வார்டு மக்கள் மட்டுமல்லாது, அனைத்து வார்டு மக்களும் தங்களின் வரி மற்றும் வரியில்லா இனங்களைச் செலுத்தலாம்.

 

வரி உயர்வு அறிவிப்பின் அடிப்படையிலேயே வரி புதுகை நகராட்சி நிர்வாகம் விளக்கம்

Print PDF

தினமணி 27.08.2010

வரி உயர்வு அறிவிப்பின் அடிப்படையிலேயே வரி புதுகை நகராட்சி நிர்வாகம் விளக்கம்

புதுக்கோட்டை, ஆக. 26: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கடந்த 2008-ல் உயர்த்தப்பட்ட வரிவிகிதத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

""நகராட்சியின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வின் மூலம் 1.4.2008 முதல் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 20 சதவீதமும் தொழில் கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 80 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து புதுக்கோட்டை வரி செலுத்துவோர் சங்கத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 28.7.2009-ல் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பெறப்பட்ட நிர்வாக அறிவுறுத்தல், உரிய அறிவிப்புகள், மறு சீராய்வுப் படிவங்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 1.4.2008 முதல் உயர்த்தப்பட்ட 80 சதவீத வரியைக் குறைக்க நகராட்சி சட்ட விதிகளில் இடமில்லை. எனவே, உயர்த்தப்பட்ட வரியை நகராட்சி நிர்வாகத்துக்கு நிலுவையின்றி செலுத்தி நகராட்சி நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.''

 

வரிகள் செலுத்தாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை உதவி ஆணையர் அறிவிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

வரிகள் செலுத்தாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை உதவி ஆணையர் அறிவிப்பு

நெல்லை, ஆக.25: நெல்லை மண்டலப்பகுதிகளில் வரி செலுத்தாதவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து நெல்லை மண்டல உதவி கமிஷனர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

நெல்லை மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியவற்றை பொதுமக்கள் உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை மாநகராட்சி கணினி பிரிவில் உடன் செலுத்தி ரசீது பெறவேண்டும். வரிகளை செலுத்தாவிட்டால் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, ஜப்தி உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 68 of 148