Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நாளை முதல் தீவிர வரிவசூல் முகாம்

Print PDF

தினமணி 10.08.2010

நாளை முதல் தீவிர வரிவசூல் முகாம்

திருநெல்வேலி, ஆக. 9: திருநெல்வேலி மாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதன்கிழமை (ஆக. 11) முதல் தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாநகராட்சியின் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் வார்டு வாரியாக வரிவசூல் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள் தவிர்த்து, நடமாடும் வரிவசூல் வாகனத்திலும் வரியை பொதுமக்கள் செலுத்தலாம்.

இந்த வரிவசூல் வாகனத்தில், பொதுமக்கள் தங்களுடைய நடப்பு மற்றும் நிலுவை வரிகளை செலுத்தி குடிநீர் துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.

இந்த வாகனம் இம் மாதம் 11 ஆம் தேதி காலை 42-வது வார்டு, மாலை 45-வது வார்டு, 12 ஆம் தேதி 8,9- வது வார்டுகள், 13 ஆம் தேதி 23-வது வார்டு, 14 ஆம் தேதி 19,26- வது வார்டுகள், 16 ஆம் தேதி 53- வது வார்டு, 17 ஆம் தேதி 54,55- வது வார்டுகள், 18 ஆம் தேதி 21- வது வார்டு, 19 ஆம் தேதி காலை 28- வது வார்டு, மாலை 29- வது வார்டு, 20 ஆம் தேதி காலை 44- வது வார்டு, மாலை 41- வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு வரும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

நெல்லை மாநகர வார்டுகளில் தீவிர வரிவசூல் முகாம்

Print PDF

தினமலர் 10.08.2010

நெல்லை மாநகர வார்டுகளில் தீவிர வரிவசூல் முகாம்

திருநெல்வேலி : நெல்லை மாநகரில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் பொருட்டு நடமாடும் வரி வசூல் வாகனம் வார்டு வாரியாக அனுப்பி வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி பகுதியில் தற்போது பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை அருகில் உளள வார்டு அலுவலகங்கள் மற்றும் அலகு அலுவலகங்களில் செலுத்தி வருகின்றனர்.

தற்போது பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் ஒவ்வொரு தெருவாக சென்று வரி வசூல் செய்யப்படவுள்ளது. அதன் விவரம்:நாளை(11ம்தேதி) காலை 9 முதல் 1 மணி வரை நெல்லை டவுன் வாகையடி முக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மதியம் 2 முதல் மாலை 5மணி வரை பேட்டை செக்கடி அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், 12ம்தேதி காலை 9முதல் 1 மணி வரை திருவனந்தபுரம் ரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை வசந்த்நகர், கொக்கிரகுளம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் வரிவசூல் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.

13ம்தேதி 23வதுவார்ட்டிற்குட்பட்ட மேலரதவீதி(நமச்சிவாயம் மகால்) பெருமாள் கீழ ரதவீதிமற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5 மணி வரை கிருஷ்ணகோவில் கீழ தெரு மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், 14ம்தேதி காலை 9 முதல் மதியம் 2மணி வரை 19 மற்றும் 26வது வார்டிற்குட்பட்ட மின்வாரிய அலுவலகம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை திருமால் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், 16ம்தேதி காலை 9 முதல் மதியம் 2மணி வரை 53வது வார்டிற்குட்பட்ட பெரிய தெரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மதியம் 2 முதல் 5மணி வரை உழவர்சந்தை(கண்டியப்பேரி) அதன் சுற்றுப்பகுதிகளிலும் வரி வசூல் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.

17ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை 54 மற்றும் 55 வார்டிற்குட்பட்ட அக்கசாலை விநாயகர் கோயில் தெரு மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், மதியம் 2 முதல் 5மணி வரை புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றுப்பகுதகிளிலும், 18ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை 21வது வார்டிற்குட்பட்ட மிலிட்டரி லைன் தெரு(சமாதானபுரம் ரவுண்டானா) அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை வடக்கு மேட்டுத்திடல்ரோடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.19ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை குலவணிகர்புரம் சர்ச் அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை 29வது வார்டிற்குட்பட்ட வி.எஸ்.டி பள்ளிவாசல் பஜார்திடல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 20ம்தேதி காலை 9 முதல் 1மணி வரை 44-வது வார்டிற்குட்பட்ட மேட்டுத் தெரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மாலை 2 முதல் 5மணி வரை 41வது வார்டிற்குட்பட்ட கீழரதவீதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் வரி வசூல் வாகனம் நிறுத்தப்படவுள்ளது.பொதுமக்கள் மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனம் தங்களது தெருக்களுக்கு வரும் போது நடப்பு மற்றும் நிலுவை வரிகளை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

குடிநீர் கட்டணம், டிபாஸிட் தொகை... உயர்வு!

Print PDF

தினமலர் 10.08.2010

குடிநீர் கட்டணம், டிபாஸிட் தொகை... உயர்வு!

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில், புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமல்படுத்த குடிநீர் வரி, டிபாஸிட் தொகை கடுமையாக உயர்த்தியுள்ளதை கண்டித்து, .தி.மு.., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.ஆத்தூர் நகராட்சி கவுன்சில் அவசர கூட்டம் நகராட்சி சேர்மன் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது.

அதில், மேட்டூர்- ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வரை 295.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் வரும் 20ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதியால் சேலத்தில் துவக்கி வைக்கப்பட உள்ளது. அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, குடிநீர் வரி மாதந்தோறும் வீட்டு உபயோகத்துக்கு (அடைப்புக்குறிக்குள் பழைய வரி) 150 ரூபாய்(75), டிபாஸிட் 6,000 ரூபாய்(3,000), வணிக உபயோகத்துக்கு 400 ரூபாய்(200), டிபாஸிட் 15,000 ரூபாய்(7,500), சிறிய தொழிற்சாலைக்கு 500 ரூபாய்(300) , டிபாஸிட் தொகை 25 ஆயிரம்ரூபாய்(10 ஆயிரம்) உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், பெரிய தொழிற்சாலைகள், திருமண மண்டபங்களுக்கு 500 ரூபாய்(300), டிபாஸிட் 30 ஆயிரம் ரூபாய் (10 ஆயிரம்) என உயர்த்த மன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது என தீர்மானம் வைக்கப்பட்டது. அதற்கு காங்கிரஸ்,- .தி.மு.., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்., நகர்மன்ற குழு தலைவர் திருஞானம் பேசுகையில், ""ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது தவறான தகவல். குடிநீர் முறையாக வழங்காத நிலையில், குடிநீர் வரி, டிபாஸிட் தொகை உயர்த்தியது மக்களை வேதனையடைய செய்துள்ளது. அத்தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என்றார்.

நகராட்சி கமிஷனர் மணிகண்டன், ""மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்க முடியாததால், புதிய குடிநீர் திட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. 295 கோடி ரூபாய் திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி, சேலத்தில் துவக்கி வைக்கிறார். அதற்கான தீர்மானமும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார். நகராட்சி கவுன்சிலர் ராஜா (.தி.மு..,), ""குடிநீர் வரி, டிபாஸிட் தொகை உயர்த்துவது குறித்து ஏற்கனவே நடந்த கூட்டத்தில் அ.தி.மு.., கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். மக்களை ஏமாற்றி வரும் தி.மு.., அரசு, அதிகளவில் குடிநீர் வரி, டிபாஸிட் செலுத்தும்படி அறிவித்துள்ளது கொடுமை,'' என்றார்.நகராட்சி சேர்மன் பூங்கொடி (தி.மு..,), ""2009ல் நடந்த கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய குடிநீர் திட்டம் அமல்படுத்தும்போது தான் குடிநீர் வரி, டிபாஸிட் தொகை உயர்த்தப்படும்,'' என்றார்.அவரது பதிலில் திருப்தி அடையாத அ.தி.மு.., கவுன்சிலர்கள் உமாராணி, சாந்தி, ராஜா, ஜெய்சங்கர், இளையராஜா, குணசேகரன் ஆகியோர் எழுந்து சேர்மன் பூங்கொடி இருக்கை முன், குடிநீர் வரி உயர்த்தும் தீர்மானத்தை நிறுத்தும்படி மனு அளித்து, வாக்குவாதம் செய்தனர். பின், ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆப்சென்ட்: நேற்று ஆத்தூர் நகராட்சி கவுன்சில் அவசர கூட்டத்தில் அ.தி.மு.., நகர்மன்ற குழு தலைவர் மோகன், தி.மு.., குழு தலைவர் ஸ்டாலின், பா..., குழு தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

 


Page 72 of 148