Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வீட்டுக்கே வரும் வரி வசூல் வேன்: மாநகராட்சியில் விரைவில் அறிமுகம்

Print PDF

தினமலர் 30.07.2010

வீட்டுக்கே வரும் வரி வசூல் வேன்: மாநகராட்சியில் விரைவில் அறிமுகம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில், வீட்டுக்கே வந்து வரி வசூல் செய்யும் வகையில், நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம் (மொபைல் டேக்ஸ் வேன்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் வீட்டுவரி, குடிநீர்வரி, கடைவரி என்பன உள்பட ஏராளமான வரி வருவாய் இனங்கள் உள்ளன. வரிசெலுத்துபவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் அல்லது ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்ட அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் வரி செலுத்துவதில் உள்ள குறைகளை களையவும், எளிய முறையில் வரி கட்டவும் மாநகராட்சி சார்பில் அந்தந்த கோட்ட அலுவலகத்தில் வரிவசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், வரி செலுத்துவர்களுக்கு சற்று பிரச்னை குறைந்தது. ஆயினும், மக்களிடம் வரிசெலுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், விரைந்து வரிவசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி, "மொபைல் டேக்ஸ் வேன்' அதாவது நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய வேன் ஒன்றை "ரீ-மாடுலேஷன்' செய்துள்ளனர். வேன் உள்ளே கம்ப்யூட்டர் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர் இந்த வேனில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் பணத்தை கட்டி அதற்குரிய வரி ரசீதை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஏரியாவுக்கும் இந்த வேன் செல்லும். முறைப்படி விழா நடத்தி இந்த வேன் வரி வசூல் பணிக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. "வரி கட்டலையா..வரி' என திருச்சி மாநகரில் விரைவில் இந்த வேன் உலா வரும்.

 

மும்பையில் சொத்து வரி வசூலிப்பதில் சிக்கல்

Print PDF

தினகரன் 28.07.2010ச்

மும்பையில் சொத்து வரி வசூலிப்பதில் சிக்கல்

மும்பை,ஜூலை 28: மும்பையில் சொத்து வரி பில்களை அனுப்ப மாநில அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது.

மும்பையில் புதிய சொத்து வரி விதிப்பு திட்டம் தயார் நிலையில் இருந்தும் அதனை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அக்டோ பர் மாதத்தில் இருந்து புதிய சொத்து வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வரும் என்று கருதப் படுகிறது. எனவே பழைய சொத்து வரியின் கீழ் சொத்து வரிகளை வசூலிக்க மாநில நகர மேம்பாட்டுத்துறையிடம் மும்பை மாநகராட்சி ஒப்புதல் கேட்டுள்ளது. ஆனால் மாநில நகர மேம்பாட்டுத்துறை இதற்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத் தடித்து வருகிறது.

இதனால் மாநக ராட்சிக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சொத்து வரியாக 2660 கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப் பிடத்தக்கது.

 

வார்டு அலுவலகங்களில் சொத்து வரி

Print PDF

தினமலர் 28.07.2010

வார்டு அலுவலகங்களில் சொத்து வரி

சென்னை : வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் சொத்து வரி வசூலிப்பது. இந்த ஆண்டு 370 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களிலும், தலைமை அலுவலகம் ரிப்பன் கட்டத்திலும், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அதோடு, சொத்து வரி வசூலிப்பவர்கள் வீடு, வீடாக சென்று வரி வசூல் செய்கின்றனர்.

மேலும், சொத்து வரி வசூலிப்பை எளிமைப்படுத்த ஆன்-லைன் மூலமும், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.இதற்கெல்லாம் மேலாக புதிதாக வார்டு அலுவலகங்களில் தனியாக ஊழியர்களை நியமித்து சொத்து வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களுக்கும், தலைமை அலுவலகத்திற்கும் சென்று சொத்து வரி செலுத்த முடியாதவர்களின் வசதிக்காக வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.சொத்து வரி வசூலிக்க வார்டு அலுவலகங்களில் நியமிக்கப்படும் ஊழியர்கள், விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வார்டு அலுவலகத்தில் பணியிலிருந்து சொத்து வரி வசூலிப்பர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சொத்து வரி வசூலிக்கப்படும். வார்டு அலுவலகங்களில் பணிபுரியும் சொத்து வரி வசூலிப்பவர்கள் காசோலைகள் மட்டுமே பெற்றுக் கொள்வர்.விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரிவதால் வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பவர்களுக்கு திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். இதற்காக மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கு சொத்து வரி வசூலிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கமிஷனர் கூறினார்.இந்த திட்டத்தை முதல் கட்டமாக கீழ்ப்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 64வது வார்டு முதல் 78வது வார்டு வரை 15 வார்டுகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் இதற்கான பலன் நன்றாக இருந்தால் இந்த திட்டத்தை படிப்படியாக மற்ற மண்டலங்களிலும் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.

 


Page 74 of 148