Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நெல்லை மாநகராட்சியில் வாகனம் மூலம் வரி வசூல் தீவிரம் வார்டு வாரியாக செல்ல ஏற்பாடு

Print PDF

தினகரன் 20.07.2010

நெல்லை மாநகராட்சியில் வாகனம் மூலம் வரி வசூல் தீவிரம் வார்டு வாரியாக செல்ல ஏற்பாடு

நெல்லை, ஜூலை 20: நெல்லை மாநகராட்சியில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வாகனம் மூலம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:

நெல்லை மாநகராட்சியில் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வாகனம் மூலம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை வார்டு 18வது வார்டில் ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், வார்டு 20ல் செயின்ட் பால்ஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், 22ம் தேதி வார்டு 19ல் மின்சார வாரியம் அலுவலகம் (முன்பு) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, பெருமாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை யும், 23ம் தேதி வார்டு 42ல் வாகையடி முக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வார்டு 45ல் பேட்டை செக்கடி அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரையும், 24ம் தேதி வார்டு 54ல் அக்கசாலை விநாயகர் கோயில் தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் வரி வசூல் செய்யப்படும்.

26ம் தேதி வார்டு 23ல் பெருமாள் மேல ரதவீதி அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வார்டு 23ல் கிருஷ்ணன்கோயில் கீழத்தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், 27ம் தேதி வார்டு 27ல் என்.ஜி.ஓ.ஏ காலனி பஜார் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 28ம் தேதி வார்டு 42ல் பெருமாள் சன்னதி தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வார்டு 52ல் டவுன் உழவர் சந்தை அருகில் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் வரி வசூல் செய்யப்படும்.

29ம் தேதி வார்டு 2 மற்றும் 3ல் செல்வ விக்னேஷ்நகர், நன்மெய்யப்பன் தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், இதே வார்டுகளில் பாலாஜி அவென்யூ மதுரை ரோடு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், 30ம் தேதி வார்டு 25ல் திருவனந்தபுரம் ரோடு அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், இதே வார்டில் புதுப்பேட்டை தெரு அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரையும், 31ம் தேதி வார்டு 36ல் காயிதேமில்லத் பள்ளி வாசல் அருகில் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், இதே வார்டில் மேலப்பாளையம் பஜார் திடல் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

நெல்லையில் நாளை முதல் தீவிர வரிவசூல் முகாம்

Print PDF

தினமணி 20.07.2010

நெல்லையில் நாளை முதல் தீவிர வரிவசூல் முகாம்

திருநெல்வேலி, ஜூலை 19: திருநெல்வேலி மாநகர் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 21) முதல் 31 ஆம் தேதி வரை தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம், நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் வார்டு வாரியாக வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிஇனங்களையும் செலுத்தலாம். இந்த வரிவசூல் வாகனம் தெருக்களுக்கே சென்று வரிவசூல் செய்யும்.

எனவே பொதுமக்கள் தங்களுடைய நடப்பு வரி மற்றும் நிலுவை வரிகளை, நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தி, குடிநீர் துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரிவசூல் வாகனம் வரும் இடம், தேதி, நேரம் வருமாறு: 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை 18-வது வார்டு ஆரோக்கிநாதபுரம், நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 20-வது வார்டு செயின்ட் பால்ஸ் ரோடு பகுதி, 22 ஆம் தேதி 19-வது வார்டு மின்சாரவாரிய அலுவலகம், பெருமாள்புரம் பகுதி.

23 ஆம் தேதி காலை 42-வது வார்டு வாகையடிமுக்கு பகுதி, மாலை 45-வது வார்டு பேட்டை செக்கடித் தெரு பகுதி, 24 ஆம் தேதி காலை 54-வது வார்டு அக்கசாலை விநாயகர் கோயில் தெரு,

மாலை 55-வது வார்டு புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு, 26 ஆம் தேதி 23-வது வார்டு பெருமாள்மேல ரதவீதி பகுதி, கிருஷ்ணன் கோயில் கீழத் தெரு. 27 ஆம் தேதி 27-வது வார்டு என்.ஜி.. ஏ காலனி பஜார் பகுதி, ஜெபாகார்டன் பகுதி, 28 ஆம் தேதி காலை 42-வது வார்டு பெருமாள் சன்னதித் தெரு பகுதி, மாலை 52- வது வார்டு திருநெல்வேலி நகரம் உழவர்சந்தைப் பகுதி, 29 ஆம் தேதி 2 மற்றும் 3-வது வார்டு செல்வ விக்னேஷ்நகர், நன்மெய்யப்பன் தெரு பகுதி, பாலாஜி அவின்யூ, மதுரை ரோடு பகுதி.

30 ஆம் தேதி 25-வது வார்டு திருவனந்தபுரம் ரோடு பகுதி, புதுப்பேட்டை தெரு பகுதி, 31 ஆம் தேதி 36-வது வார்டு காயிதேமில்லத் பள்ளிவாசல் பகுதி, மேலப்பாளையம் பஜார் திடல் பகுதி ஆகிய இடங்களுக்கு நடமாடும் வரிவசூல் வாகனம் வரும் என் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

 

சொத்து வரி வசூல் : போடி நகராட்சி சாதனை

Print PDF

தினமணி 30.06.2010

சொத்து வரி வசூல் : போடி நகராட்சி சாதனை

போடி, பிப். 15: தமிழகத்தில் முதல்முறையாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது போடி நகராட்சி.

இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை இனங்கள் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.

நகராட்சி நிர்வாகம் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்களை வசூல் செய்ய துரித நடவடிக்கை எடுத்தது.

கணினி மூலம் வசூல் செய்யும் பணி நடைபெற்றது. வசூல் செய்யும் நேரம் அதிகரிக்கப்பட்டது. மேலும் சனிக்கிழமைகளிலும் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டது.

வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்னை இருப்பின் சொத்து உரிமையாளர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு, அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. விளம்பரம் மற்றும் வீடு வீடாக நகராட்சி அலுவலர்கள் சென்று அறிவுறுத்தியதன் மூலம் பொதுமக்கள் தங்கள் சொத்து வரிகளை செலுத்தினர்.

இந்த நகராட்சியில் சொத்து வரி 16 ஆயிரத்து 266 வீடு மற்றும் காலி இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மார்ச் மாத இறுதியில்தான் சொத்து வரி வசூல் முடியும். சில நேரங்களில் ஏப்ரல் மாதம் வரையும் நடைபெறும்.

ஆனால் நகராட்சியின் சிறப்பு ஏற்பாடுகளால் பிப்ரவரி மாதத்திலேயே 100 சதவீதம் வசூல் முடிந்துள்ளது. இதில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து சாதணை புரிந்துள்ள நகராட்சியாக போடி விளங்குகிறது.

இந்த நகராட்சியில் 10 ஆயிரத்து 320 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.74 லட்சத்து 77 ஆயிரத்து 878 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகராட்சியில் தொழில் வரி, குத்தகை இனங்கள் உள்ளிட்ட வருவாய் இனங்கள் மூலம் ரூ.3 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 319 வருமானம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது ரூ.2 கோடியே 21 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் கூறும்போது, பொதுமக்கள் ஆர்வமுடன் வரிகளை செலுத்துகின்றனர். இதனால் இந்த சாதனையைப் படைத்துள்ளோம், இதன் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.

 


Page 76 of 148