Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

கம்பத்தில் குடிநீர் இணைப்புக்கான கூடுதல் டெபாசிட் தொகையை திரும்பப் பெற வலியுறுத்தல்

Print PDF

தினமணி 18.06.2010

கம்பத்தில் குடிநீர் இணைப்புக்கான கூடுதல் டெபாசிட் தொகையை திரும்பப் பெற வலியுறுத்தல்

கம்பம், ஜூன் 17:கம்பம் நகராட்சியில் குடிநீருக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் என நுகர்வோர் உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கம் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

கம்பத்தில் நுகர்வோர் உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் வி.ராஜேந்திரன், மாநில தொழிற்சங்கச் செயலாளர் முருகன், மாநிலத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் எம்.வி.தெய்வேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையிலும் தமிழை வழக்காடு மொழியாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரியும், இதற்காக உண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், கம்பம் நகராட்சி குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்தியதை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

வரிகளை வசூலிக்க மாநகராட்சி புது முயற்சி

Print PDF

தினமலர் 17.06.2010

வரிகளை வசூலிக்க மாநகராட்சி புது முயற்சி

மதுரை: நிதி ஆண்டு துவக்கம் முதலே வரியை வசூலிக்க துவங்கி உள்ளதால், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் உயர்ந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வரி வசூல் முறையாக செய்யப்படவில்லை. விரிவாக்கப் பகுதிகளில் புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. கட்டடங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையும் சரியாக வசூலிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆண்டு முடியும் போது மார்ச் மாதத்தில் தான், மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் தீவிரம் காட்டுவர். இதனால் முழுமையான வரி வசூலில் அதிகாரிகள் ஈடுபட முடியவில்லை. இதனால், "வரி வசூல் என்றாலே நிதி ஆண்டு முடிவில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்று" என்ற கருத்து அலுவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, நிதி ஆண்டின் துவக்கம் முதல் வரி வசூலில் ஈடுபட மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இப்போதே வரி வசூலில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் பல லட்சம் ரூபாய் வரி வசூலாகிறது. சென்ற 11ம் தேதி மட்டும் ஒரே நாளில், சாதனை அளவாக 34 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூலாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் அலுவலர்களுக்கு வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வார இறுதியில் நடக்கும் மறு ஆய்வுக் கூட்டத்தில் இலக்கை அடைய முடிந்ததா என விவாதிக்கப்படுகிறது. துவக்கம் முதல் வரி வசூல் செய்வதால் நிதி ஆண்டு இறுதியில் வரி வசூல் எளிதாக இருக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர

 

ஓசூர் நகராட்சியில் சொத்து வரி ரூ.6 கோடி நிலுவை நிதி நெருக்கடியால் வளர்ச்சி பணி பாதிப்பு

Print PDF

தினமலர் 17.06.2010

ஓசூர் நகராட்சியில் சொத்து வரி ரூ.6 கோடி நிலுவை நிதி நெருக்கடியால் வளர்ச்சி பணி பாதிப்பு

ஓசூர்: ஓசூர் நகராட்சியில் சொத்து வரியை குறைத்தும் பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் வரி செலுத்த ஆர்வம்காட்டாமல் இழுத்தடித்து வருவதால், 6 கோடி ரூபாய் வரிபாக்கியுள்ளது. இதனால், நகராட்சியின் வளர்ச்சி பணிகள் தேக்கமடைந்து வருகிறது.தமிழகத்தில் அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளில் ஓசூர் நகராட்சியும் ஒன்று.

நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகள், வணிக வளாங்கள், தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் ஆகியவற்றின் மதிப்புக்கு தகுந்தவாறு நகராட்சி சார்பில் சொத்து வரிவசூல் செய்யப்படுகிறது.குடிநீர் கட்டணம், கடை வாடகை, வீடு மனை மற்றும் கட்டிடங்களுக்கு என்..சி., வழங்குதல் உள்ளிட்ட இதர வருவாய் இனங்கள் மூலமும் நகராட்சிக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

நகராட்சியின் மொத்த வருவாய் இனத்தில் சொத்து வரி மூலம் மட்டும் 75 சதவீதம் வருவாய் கிடைத்து வருகிறது.கடந்த காலத்தில் மாநகராட்சிகளை போல் ஓசூர் நகராட்சியிலும் சொத்து வரி அதிகமாக நிர்ணயித்து வசூலிக்கப்பட்டது. "' மண்டலத்தில் சதுர அடிக்கு 2.50 ரூபாயும், "பி' மண்டலத்தில் 2 ரூபாயும், "சி' மண்டலத்தில் 1.80 ரூபாயும் வரி வசூலிக்கப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, யாரும்வரி செலுத்தாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதனால், உள்ளாட்சி நிர்வாகம் மறு மதிப்பீடு செய்து கடந்த இரு ஆண்டுக்கு முன் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் அதிரடியாக 50 சதவீதம் சொத்து வரியை குறைத்தது. அதன்படி "' மண்டலத்தில் சதுர அடிக்கு 1.35 ரூபாயும், "பி' மண்டலத்தில் 1.10 ரூபாயும், "சி' மண்டலத்தில் சதுர அடிக்கு 1 ரூபாயும் வரி வசூலிக்கப்படுகிறது.

நகராட்சி வரிவசூல் துறையிலும் வரிபாக்கியை வசூல் செய்வதற்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, அனைத்து வரிகளும் உடனுக்குடன் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், வரிவசூல் எதிர்பார்த்தளவு இல்லை. கடந்த மூன்று மாதமாக பொதுமக்களும், தனியார் வர்த்தக நிறுவனங்களும் மற்றும் அரசு கட்டிடங்களும் முற்றிலும் தங்கள் வரியை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர்.

நகராட்சி வணிக வளாத்தில் கடைகளை ஏலம் எடுத்தவர்களும் வரிசெலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். ஒரு சில தனியார் வணிக வளாக கட்டிடங்கள், கடைகள் மீது ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க சென்றால், அவர்கள் ரவுகளை விட்டு மிரட்டி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.நகராட்சி கமிஷனர் பலமுறை வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை யாரும் வரிசெலுத்த முன்வரவில்லை.

நகராட்சி நிர்வாகமும், வரிசெலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுகிறது. ஒரு சில வார்டுகளில் வீடுகளுக்கு 50 சதவீதம் வரி குறைக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.இதனால், அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஒருமித்து முடிவு செய்து நகராட்சிக்கு வரிசெலுத்தாமல் உள்ளனர்.

தற்போது வரை நகராட்சியில் 6 கோடி ரூபாய் வரை வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதில், சொத்து வரி மட்டும் 75 சதவீதம் வசூலாகாமல் உள்ளன. இதனால், நகராட்சியில் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட பணம் இல்லாமல் கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 


Page 78 of 148